“சாப்பிடும்போது தவிர வேறு எதற்காகவும் வாய் திறக்காதீர்கள்!”

நோய்வாய்ப்பட்ட தலைவர்களின் உடல்நலம் பற்றி எதுவும் எழுதாதீர்கள், சைபர் கிரைம் வழக்கு பாயும்.

அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஒன்றும் பேசாதீர்கள், அவதூறு வழக்கு பாயும்.

அரசு அதிகாரிகளை எதற்காகவும் விமரிசிக்காதீர்கள், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கு பாயும்.

அரசின் அழிவுத் திட்டங்கள் பற்றி எந்தக் கருத்தும் தெரிவிக்காதீர்கள், தேசத்துரோக வழக்கு பாயும்.

ஆக, எதைப் பற்றியும் எழுதாதீர்கள், பேசாதீர்கள், விமரிசிக்காதீர்கள், கருத்து தெரிவிக்காதீர்கள்.

மொத்தத்தில், சாப்பிடும்போது தவிர எதற்காகவும், எதைப் பற்றியும் வாய் திறக்காதீர்கள்…

வாழ்க இந்திய சனநாயகம்!

சுப. உதயகுமாரன்

பச்சை தமிழகம் கட்சி ஒருங்கிணைப்பாளர்