“உன்னை மிதிக்க சொன்னவனிடம் கேள்…”

தம்பி, நீ பெரியாரை காலால் மிதித்தது மகிழ்ச்சி!

உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் –

என்ன காரணத்திற்காக மத்திய மந்திரி, சங்கரச்சாரி சாமி காலுக்கு கிழே தரையில உட்கார்ந்துகொண்டு இருக்கிறார், இன்னொருத்தர் சங்கரச்சாரி சாமிக்கு சரி சமமா உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்?

0a1a

உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் –

என்ன காரணத்திற்காக பூணூல் போட்டவர் கடவுளுக்கு பூஜை செய்றார்; பூணூல் போடாதவங்க, முறையான அர்ச்சகர் பயிற்சி பெற்றும் கடவுளுக்கு பூஜை செய்ற உரிமைக்காக போராடிக்கிட்டு இருக்காங்க?

0a1j

உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் –

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் கோவில் தேரை இழுத்தா வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள் கோவில் தேரை இழுக்கவிடாமல் கலவரம் செய்றாங்க?

0a1h

உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் –

எதுக்கு தாழ்த்தப்பட்ட இந்துக்கள் பிணத்தை பொதுவழியில் எடுத்துச் சென்றால் வன்னியர், தேவர், கவுண்டர், நாடார் போன்ற சாதி இந்துக்கள், பிணத்தை எடுத்துச் செல்ல விடாமல் கலவரம் செய்றாங்க?

உன்னை மிதிக்கச் சொன்னவனிடம் கேள் –

இந்துக்களே ஒன்று சேருங்கள் என்று சொல்றீங்க; பிறகு எதுக்கு இந்து சாதிக்குள் காதலித்தால் தலையை வெட்டி தண்டவாளத்தில் போடுறாங்க?

0a1o

தம்பி, இதற்கெல்லாம் உன்னை மிதிக்கச் சொன்னவன் பதில் கொடுக்க மாட்டான்.

பெரியார் இடத்தில பதில் இருக்கிறது.

உனக்கு பதில் தெரிந்தால் – உன்னை மிதிக்கச் சொன்னவன் முகத்தில் காறித் துப்புவாய்…!

நா.பாஸ்கர்