“சென்னை விமான நிலையத்தில் உணவு விலை அராஜகம்: ஃபீலிங் ப்ரவுடு…!”

ஏர்போர்ட்டில் உணவுகளை அராஜக விலையில் விற்பது என்கிற ட்ரிக்கை எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் ஏர்போர்ட்டுகளில் (சென்னை, பெங்களூர் இரண்டிலுமே) நான் கவனித்தவரை இது கொஞ்சம் ஓவர்.

ஆவரேஜாக ஒரு பில்டர் காப்பி ரூ.80, ஒரு தோசை ரூ.140, ஒரு சிக்கன் பிரியாணி ரூ.300. இவை மூன்றும் அங்கே கிடைக்கும் மெனுக்களிலே economical options என்றறிக. இது போதாதென்று இதற்கு மேல் டேக்ஸ் வேறு.

வெளியே ஒரு பில்டர் காப்பி ரூ.20க்குக் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம், ஏர்போர்ட்டில் அதனைவிட நான்கு மடங்கு சரி. ஆனால் வெளியே கிடைக்கும் காப்பியின் எந்த அம்சமுமே இல்லாமல், பார்க்க காப்பி போல இருக்கும் ஒரு ட்ரிங்க் தான் கிடைக்கிறது. அதற்கு இந்த விலை.

போலவே, சிக்கன் பிரியாணி வெளியே கிடைப்பதில் பாதி அளவு தான் (பொதுவாக ஏர்போர்ட்டில் கிடைக்கும் எல்லா உணவின் அளவும் குறைவாகத் தான் இருக்கிறது. விமானத்தில் பயணிப்பவர்கள் குறைவாகத் தான் உண்பார்கள் என்று ஐநா சபை எதுவும் அறிவித்ததா என்று தெரியவில்லை). தரம் சொல்லவே தேவையில்லை. பார்ப்பதற்கு பிரியாணி என்று நம்பும் அளவிற்கு ஏதோ ஒன்று செய்து தருகிறார்கள். அதற்கு விலை ரூ.300..

அராஜக விலை வைப்பது என்று முடிவு செய்துவிட்டார்கள் அதை ஒழுங்கான quality, quantity யுடன் செய்து கொடுத்து காசைப் புடுங்க வேண்டியது தானே? லஞ்சமும் வாங்கிக்கொண்டு வேலையையும் செய்து முடிக்காமல் இழுத்தடிக்கும் கவர்மெண்ட் ஆபீஸ் ஆட்களைப் போன்ற புது ட்ரெண்ட்டா இது?

நம்மூரில் பொதுஜனம் என்றால் இழிச்சவாயன் என்றொரு அர்த்தம் உண்டு போல. பீலிங் ப்ரவுடு…!

N Naveenkumar