வெங்கட் பிரபுவும், சொப்பன சுந்தரியும்… இப்போது ஆடைகளிலும், பொருட்களிலும்…!

தமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பரப்படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர். டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியீட்டு விழா என எண்ணற்ற விளம்பர யுக்திகள் திரையுலகில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போதைய  காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது, ‘மெர்ச்சண்டைஸ்’ எனப்படும் படத்தை சார்ந்த ஆடைகள், பொருட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவது  தான்.

அப்படிப்பட்ட புதுமையான யுக்தியை  ‘ஃபுள்ளி பிலிமி’ நிறுவனத்தோடு இணைந்து  சமீபத்தில் கையாண்டு இருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் அவருடைய  ‘சென்னை 28 – II ‘ படக்குழுவினரும்.

‘சென்னை 28’ படத்தின் பிரபலமான நகைச்சுவை வசனங்களை கொண்டும், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ‘சென்னை 28 – II’ படத்தின் சொப்பன சுந்தரி பெயரை கொண்டும் பல ‘டீ – ஷர்ட்களும்’, ஆடைகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இதனை நேற்று (அக். 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை) வெங்கட் பிரபுவும் அவருடைய ‘சென்னை 28 – II ‘ படக்குழுவினர்களான பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த், வைபவ், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோரும் இணைந்து வேளச்சேரியில் உள்ள ‘பீனிக்ஸ் மாலில்’ வெளியிட்டனர்.

நவமபர் மாத இறுதியில் வெளியாக இருக்கும் ‘சென்னை 28 – II’ படத்திற்கு இந்த புதுமையான விளம்பரம் மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.

Read previous post:
0a1d
“சென்னை விமான நிலையத்தில் உணவு விலை அராஜகம்: ஃபீலிங் ப்ரவுடு…!”

ஏர்போர்ட்டில் உணவுகளை அராஜக விலையில் விற்பது என்கிற ட்ரிக்கை எல்லா நாடுகளிலும் கடைப்பிடிக்கிறார்களா என்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் ஏர்போர்ட்டுகளில் (சென்னை, பெங்களூர் இரண்டிலுமே) நான் கவனித்தவரை

Close