“லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தான் நல்ல கவுன்சிலிங் தேவை!”

லஷ்மி ராமகிருஷ்ணனை பாண்டே கேள்வி கேட்ட நிகழ்ச்சி பார்த்தேன். ஜனநாயகத்தின் நான்காவது தூணை வைத்துக் கொண்டு, மாறும் அரசியல் மேகங்களுக்கு ஏற்ப அதிகாரத்திற்கு சாமரம் வீசும் பாண்டே போன்ற சந்தர்ப்பவாதிகள் அல்லது ஊடக முதலாளிகளின் ஊதுகுழல்கள் எப்படி இன்னொரு ஊடக அடிமையை கேள்வி கேட்கும் தகுதியை அடைய முடியும் என்றே தெரியவில்லை.

ஆனால் ஒன்று, பொதுவாக வழவழ என்று இளித்துக் கொண்டு பிரபலங்களுக்கு சொறிந்து கொடுக்கும் நேர்காணல்களுக்கு நடுவில் பொதுச்சமூகத்தின் மனதில் உள்ள கேள்விகளை தயங்காமல் வந்திருப்பவர்களின் முன் சாமர்த்தியமாக எறியும் பாண்டேவின் திறமை பிடித்திருந்தது.

ஏறத்தாழ அனைத்து விருந்தினர்களுமே பாண்டேவின் கேள்விகளுக்கு திணறும் போது உள்ளுக்குள் சங்கடத்தை ஒளித்துக் கொண்டிருந்தாலும் முகத்தை டெடராக வைத்துக் கொண்டு பாண்டேவை லஷ்மி ராமகிருஷ்ணன் திறமையாய் எதிர்கொண்டது ரசிக்க வைப்பதாய் இருந்தது. என்னவொரு ரெளத்திரம்?

தாம் செய்து கொண்டிருப்பது அறம் சார்ந்த சமூக சேவை என்று உண்மையிலேயே லஷ்மி ராமகிருஷ்ணன் நம்புவாராயின், அவருக்குத்தான் முதலில் நல்ல கவுன்சிலிங் தேவை. மற்றபடி ஊடகங்களின் வணிகத்திற்கு தாமும் உடன்போகிறோம், ஆனால் இது சார்ந்த எதிர்ப்புகளை சமாளித்துத்தான் ஆக வேண்டுமே என்று நினைப்பாராயின் திறமையான சமாளிப்பு.

ஆனால் இது போன்ற பஞ்சாயத்து நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அதன் நடத்துனர்களாக ஏன் ரிடையர்ட் ஆன பெண் நடிகைகள், பிரபலங்களை மட்டும் கூப்பிடுகிறார்கள்? நடிகர் சிவகுமார் போன்ற ஆண்கள் வந்தால் டிஆர்பி ரேட்டிங் ஏறாதா?

SURESH KANNAN

Read previous post:
0a1e
சென்னை 600 028 பாகம் 2 – விமர்சனம்

‘சென்னை 600 028’ முதல் பாகத்தில் ஷார்க்ஸ் அணியில் இருந்தவர்களில் சிலர் வேலை காரணமாக பிரிந்துவிட, பத்து வருடங்களாக சிவா, நிதின் சத்யா, விஜய் வசந்த், அஜய்

Close