மோடியும் 13 மார்வாடிகளும்

இந்தியா, துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்குகிறது என்ற கருத்தை நாம் முன்வைக்கும்போது எந்த தேசிய இனம் நம்மை ஒடுக்குகிறது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு இனம் ஒடுக்கப்படுகிறது என்றால் அங்கே ஒடுக்கும் இனமும் இருக்க வேண்டும், அப்படி என்றால் இந்த துணைகன்டத்தில் நம்மை ஒடுக்கும் இனம் எது? காஷ்மீரி, பீகாரி, அஸ்சாமி, மிசோ, மராத்தி, தெலுங்கு, தமிழ் போன்ற இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் தனது உரிமை பறிக்கப்படுகிறது என்று போராடுகிறது.

யார் பறிக்கிறார்கள், அந்த எதிரி யார் என்று தெரியாமல் தேசிய இன விடுதலை குறித்து பேசுவது முட்டாள்தனமானது. ஈழத்தில் ஒரு சுதந்திரமான வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை வழியுறுத்தி தமிழ்நாட்டில் தமிழர்கள் ஒரு போராட்டம் நடத்தினால் அதை இந்தியாவில் உள்ள எந்த தேசிய இனமும் எதிர்க்காது ஆனால் இந்தியா எதிர்க்கும். அப்ப இங்க இந்தியா என்பதுதான் என்ன??

கிழக்கிந்திய கம்பெனி இந்தியா துணைகண்டத்திற்கு வந்து இங்கு விளையும் பொருட்களை வாங்கி எற்றுமதி செய்வதற்காக வணிகத்தை துவங்கிய போது அவர்களுக்கு குறைந்த அடிமட்ட விலையில் பொருட்களை வாங்கி கைமாற்றி விற்ற தரகு கூட்டம்தான், பின்னாலில் ஆங்கிலேயர்கள் நிறந்தரமாக இந்தியாவில் தங்கி ஏற்றுமதி செய்வதற்கான அடித்தளத்தை
அமைத்துக் கொடுத்தனர். அந்த தரகு வியாபாரிகள் வேறுயாருமில்லை இந்த மார்வாடி பனியாக்கள் தான்.

வெள்ளையர்களை இந்த மண்ணை ஆக்கிரமித்து சுரண்டுவதிற்கு அடித்தளம் போட்டுக் கொடுத்ததில் இந்த மார்வாடிகளுக்கு பெரும்பங்கு உண்டு. பிரிட்டீஷ் ஆட்சியில் இந்திய துணைகண்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் செத்துப்போனதற்கு இந்த மார்வடிகளும் ஒரு காரணம்.

பின்னாலில் இவர்கள்தான் பெரும் தரகு முதலாளிய வர்க்கமாக வளர்ந்து நிற்கிறார்கள். அதேபோல் வெள்ளையர்கள் இந்த மண்ணை சுதந்திரமாக சுரண்டுவதற்கு ஏற்றார்போல் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கியபோது அதில் பெரும்பயன் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள். தாதுபஞ்சத்தில் கோடிக்கணக்கான மக்கள் செத்தபோது மார்வாடிகளும் பார்ப்பனர்களும் பிரிட்டிஷ்காரர்களுடன் அதிகாரத்தையும் வணிகத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

இந்திய துணைகண்டத்தில் வாழ்ந்த பெரும்பான்னையான தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கும் ஒரு நிர்வாக கட்டமைப்பை உருவாக்கி நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தது பிரிட்டிஷ் அரசு. இந்திய சுதந்திரப்போர் வெடித்தபோது வெள்ளையர்களை அகற்றி விட்டு சுதந்திரமாக அனைத்து தேசிய இனத்தையும் சுரண்டும் நோக்கம் ஆளும் வர்க்கமான பார்ப்பன – பனியா கும்பலுக்கு இருந்தது.

அதனால்தான் இந்திய சுதந்திரப்போர் என்பதே நிர்வாக கட்டுமானத்தை வெள்யைர்களிட்ம் இருந்து பார்ப்பன பனியா கூட்டத்திற்கு கையளிக்கப்பட்டதே ஒழிய தேசிய இனங்களுக்கு விடுதலை கொடுக்கப்படவில்லை.

இவர்கள் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்தனர், ஆனால் அவர்களின் நிர்வாக கட்டமைப்பை ஏற்றுக்கொண்டனர். இந்திய தேசிய விடுதலை என்று சொல்லுவதே மோசடியான வேலை. இந்தியாவில் நடந்தது தேசிய விடுதலையல்ல பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்பு போர்.

1947க்கு பிறகு இந்த பார்ப்பன பனியா கும்பல் இந்திய துணைகண்டத்தை தனது வணிக நோக்கத்திற்கும் ஆட்சி அதிகாரத்திற்கு ஏற்றார்போல் பழைய பிரிட்டிஷ் ஆட்சி முறையை இன்றும் தக்கவைத்து வருகிறது. இந்த அதிகாரவர்க்கம் தான் இன்று இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் உரிமையை பறித்துவருகிறது.

குறிப்பாக 2014ம் ஆண்டு தேர்தலில் மோடியை வெற்றி பெறச்செய்தது இந்த பார்ப்பன பனியா கும்பல்தான். அவர்களுக்காகத்தான் மோடி ஒவ்வொரு நாட்டிற்கும் பறந்து சென்று பல்லாயிரம் கோடிக்கான வணிக ஒப்பந்தங்களை போட்டுக்கொடுத்தார். அதேபோல் இந்தியாவில் இருந்த கொஞ்சநஞ்ச மாநில உரிமைகளை முழுமையாக அகற்றிவிட்டு பார்ப்பன பனியாவின் சர்வாதிகார ஆட்சியை கொண்டுவர தீவிரமாக வேலைசெய்து வருகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மோடி அரசு நிறைவேற்றிய பெரும்பான்மையான திட்டங்கள் இந்த மார்வாடிகளின் வணிக நலனுக்கானது. 2016 நவம்பர் 8ம் தேதி இரவு மோடி கருப்புப் பணத்தை ஒழிக்கப்போறேன்னு சொல்லி 500, 1000 ரூபாய் நோட்டுகள செல்லாதுன்னு அறிவிச்சாரு. புழக்கத்தில் இருந்த 15.41 லட்சம் கோடில 99.3% நோட்டுகள் ரிசர்வு வங்கிக்கே திரும்பி வந்துருச்சு.

அப்ப மோடி அரசு கருப்பு பண ஒழிப்புங்கர போர்வையில என்ன செய்தது? சிறு குறு வணிகர்களின் கையில் இருந்த பணப்புழக்கத்தை முழுசா தடுத்து காசில்லா பரிவர்த்தனை என்ற போர்வையில் ஆன்லைன் மார்க்கெட்டிங் கம்பெனிகளுக்கு சாதகமான வேலைகளை செய்தது.

100க்கும் 200க்கும் ATM வாசலில் மக்கள் கஷ்டப்பட்டு அடிவாங்கி செத்தபோது கோடிக்கனக்கான ரூபாயை லாபமா சம்பாரிச்சது இந்த ஆன்லைன் வர்த்தக கம்பெனிகள். கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில ஆன்லைன் வர்த்தகத்தில் பல்லாயிரம் கோடிகளை சம்பாரித்தது 13 மார்வாடி கம்பெனிகள். 2019ஆம் ஆண்டு பா.ஜ.கவின் தேர்தல் செலவிற்கு நிதியாக பெரும் தொகையை இந்த 13 மார்வாடிகள் கொடுத்துள்ளனர்.

 1. Sachin Bansal & Binny Bansal – Founder, CEO of Flipkart
  2. Mukesh Bansal – Founder, CEO of Myntra
  3. Rohit Bansal – Co-founder & COO of Snapdeal
  4. Peeyush Bansal – Founder of Lenskart
  5. Manmohan Agarwal – Founder, CEO of Yebhi
  6. Dinesh Aggarwal – Founder, CEO of IndiaMART
  7. Bhavish Aggarwal – Founder, CEO of Ola Cabs
  8. Gaurav Aggarwal – CEO of Savaari Car Rentals
  9. Sandeep Aggarwal – Founder & CEO of ShopClues
  10. Manu Agarwal – Founder of Naaptol
  11. Ritesh Agarwal – Founder & CEO of OYO Rooms
  12. Deepinder Goyal – Founder, CEO of Zomato
  13. Ashish Goel – CEO of Urban Ladder

இந்த மார்வாடிகளின் வணிக நலனுக்கு சாதகமான அரசியல் சூழலை பாதுகாப்பதில் பார்ப்பன அதிகாரவர்க்கம் மிக தீவிரமாக வேலை செய்து வருகிறது. இந்த பார்ப்பன அதிகாரவர்க்கத்தின் தீவிரவாத கும்பல்தான் ஆர்.எஸ்.எஸ். இவர்களின் இறுதி லட்சியமாக இந்திய துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களின் சிறு குறு வணிகர்களை ஒழித்துவிட்டு பெரும் மார்வாடி குழுமங்களை உருவாக்குவது.

அவர்களே இந்தியாவின் தேசிய முதலாளிகள், அதேபோல் துணைகண்டத்தில் உள்ள அனைத்து சிறு, குறு நாட்டார் தெய்வங்களை அழித்து ராமன், கிருஷ்ணன் போன்ற பெருந்தெய்வ வழிபாட்டை முறையை கொண்டுவந்து இந்து மதம் என்ற ஒன்றை நிறுவனமயமாக்கி ஆர்.எஸ்.எஸ்ன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுவது.

இறுதியாக துணைகண்டத்தில் உள்ள அனைத்து மாநில கட்சிகளையும் ஒழித்து விட்டு தேசிய கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு அனைத்து தேசிய இனங்களையும் அடக்கியாள்வது. இந்த அடிப்படையில்தான் இந்தியாவில் பாசிசத்தை மோடி அரசின் துணையுடன் பார்ப்பன பனியா கும்பல் வளர்த்து வருகிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த பார்ப்பன பனியா கும்பல் சாதிக்கலவரம், மதக்களலவரம், வந்தேறி அரசியல் போன்ற பல்வேறு பல்வேறு முரண்பாடுகளை திட்டமிட்டு வளர்த்து வருகிறது. இந்த துணைகண்டத்தில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் ஒரே எதிரி இந்த பாசிச பார்ப்பனிய பனியா அரசும் அதன் ஏஜென்டான ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க மோடி அரசு.

சத்தியராஜ்
மே 17 இயக்கம்

 

Read previous post:
0a1a
ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு, படபூஜையுடன் மும்பையில் இன்று தொடங்கியது. ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு “தர்பார்” என பெயர்

Close