ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு, படபூஜையுடன் மும்பையில் இன்று தொடங்கியது.

ஏ.ஆர்.முருகதாஸ்  இயக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இதற்கு தர்பார்என பெயர் வைத்துள்ளனர். ரஜினிகாந்த் – ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதன்முதலாக இணையும் படம் இது. இந்த “தர்பார்“ படம் ரஜினிகாந்த் நடிக்கும்  167-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

‘2.0’  எனும் பிரமாண்ட படத்தை தயாரித்த  தயாரிப்பு நிறுவனமான  லைகா ப்ரொடக்ஷஸ்  இப்படத்தை தயாரிக்கிறது. 2.0  படத்திற்கு  பிறகு  ரஜினியோடு  லைகா  நிறுவனம்  இணையும்  இரண்டாவது படம் இது.

பல வெற்றி படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும்  நயன்தாரா நடிக்கும்  புதிய படம்  இது. ரஜினியுடன் நயன்தாரா மூன்று  படங்களில் நடித்து   11 வருடங்களுக்கு பிறகு  மீண்டும் இந்த படத்தில் இணைந்துள்ளார். கோ கோ படத்தை அடுத்து நயன்தாரா – லைகா  நிறுவனம் இணையும் இரண்டாவது படம் இது .

இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். ரஜினியுடன் அனிருத் இரண்டாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். விஜய் நடிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி  லைகா  புரொடக்ஷன்ஸ் தயாரித்த கத்தி படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸூடன் அனிருத்  இரண்டாவது முறையாக இணைத்துள்ளார்.

இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியுடன் இணைகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு “தர்பார்” படத்தில் சேர்ந்து பணியாற்றுவது  இரண்டாவது முறையாகும். அதேபோல் ஏ.ஆர் முருகதாஸுடன் இரண்டு படங்களில்  கூட்டணி அமைத்த சந்தோஷ் சிவன் மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸூடன் இப்போது இணைத்துள்ளார்.

‘தர்பார்’ படப்பிடிப்பு இன்று படபூஜையுடன் மும்பையில் தொடங்கியது. பூஜையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் முருகதாஸ், சண்டை இயக்குநர் ராம் – லட்சுமண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Read previous post:
0a1a
நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது ரஜினியிடம் தெரிவியுங்கள்!

நதிகளை இணைக்க முடியாது என்று யாராவது திரு.ரஜினிகாந்திடம் தெரிவியுங்கள். இணைக்கப்பட்டுள்ள கட்டுரை இது குறித்து விரிவாக பேசுகிறது. ஏன் முடியாது அல்லது தேவையற்றது என்று விவாதிக்க விரும்பினால்

Close