“விவாகரத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது”: சௌந்தர்யா அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், அவரது கணவர் அஸ்வின் ராம்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடும், மனக்கசப்பும் ஏற்பட்டிருப்பதாகவும், இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இது குறித்து எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்த சௌந்தர்யா, தற்போது தனது மௌனத்தை கலைத்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “என் மணவாழ்வு பற்றிய செய்திகள் உண்மையே. ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பிரிந்து வாழ்ந்துவருகிறோம். விவாகரத்து தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. என் குடும்பத்தின் தனிப்பட்ட விவகாரத்தை மதிக்குமாறு நான் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

சௌந்தர்யாவின் ட்விட்டர் செய்தி:

0a1c