ஜெயலலிதா “ஆவி” எஸ்.வி.சேகரை மட்டும் தொடர்பு கொண்டு பேசியது ஏன்?

ஜெயலலிதாவின் ஆவி தன்னை தொடர்பு கொண்டு பேசியதாக கூறியிருக்கிறார் ஆரியத்துவவாதியும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான நடிகர் எஸ்.வி.சேகர்.

இன்று வெளிவந்துள்ள ‘ஜூனியர் விகடன்’ பத்திரிகைக்கு எஸ்.வி.சேகர் பேட்டி அளித்துள்ளார். அதில், “இறந்துபோன எங்க அப்பா கூட நான் இன்னும் தொடர்பில் இருக்கேன். அவருடைய ஆத்மா என்கிட்ட இன்னமும் பேசிக்கிட்டுத் தான் இருக்கு. ஒருமுறை ஜெயலலிதா ஆத்மாவே கூட என்னை தொடர்பு கொண்டு பேசியிருக்கு. அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேன். நேரம் வரும்போது சொல்வேன்” என்று கூறியுள்ளார்.

பேய், பிசாசு, ஆவி, பூதம் என்பவை எல்லாம் வெறும் பீலா என்பது ஒருபுறம் இருக்கட்டும். இன்று அணி திரட்டி, முட்டி மோதி, இரட்டை இலை சின்னத்தையே பறிகொடுத்து நிற்கும் தனது கட்சியின் முக்கிய புள்ளிகளான சசிகலா, டிடிவி.தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இவர்களில் ஒருவரை ஜெயலலிதா ஆவி தொடர்பு கொண்டு பேசாமல், தனது எதிரியான காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திரரின் கையாளான எஸ்.வி.சேகரை தொடர்பு கொண்டு பேசியது ஏன்?

சங்கரராமன் படுகொலை பற்றி பேசியிருப்பார்களோ…?

பார்ப்பனர்கள் மனம்விட்டு தங்களுக்குள் பேசிக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கும். நமக்கு எதற்கு வம்பு…!

அமரகீதன்