கோல்டன் குளோப் விருதுக்கான திரையிடல்: பிரகாஷ்ராஜின் ‘சில சமயங்களில்’ தேர்வு!

இயக்குனர்கள் விஜய், பிரபுதேவா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ்ராஜ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய படம் இது. எய்ட்ஸ் நோய் பாதித்திருக்கிறதா, இல்லையா என்று பரிசோதிப்பதற்காக ரத்த மாதிரியை கொடுத்துவிட்டு, அதன் ரிசல்ட்டுக்காக பதைபதைப்புடன் காத்திருக்கிறார்கள் 8 கதாபாத்திரங்கள் என்பதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, அந்த 8 கதாபாத்திரங்களின் பின்னணி குறித்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் பிரியதர்ஷன்.

உலகளாவிய பிரச்சனையான எய்ட்ஸ் பிரச்சனையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படம், உலகப்பட விழாக்களுக்கும், விருது விழாக்களுக்கும் அனுப்பப்பட இருக்கிறது.

அந்த வகையில் தற்போது இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கான உலகளாவிய திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. இதன் திரையிடல் அக்டோபர் 6-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது.

Read previous post:
0a
தப்படிக்கும் கலைஞன் – ஒப்பாரி வைக்கும் பெண் காதல் கதை ‘தப்பாட்டம்’!

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் தயாரிக்கும் படம் ‘தப்பாட்டம்’. இப்படம் இவரது தயாரிப்பு நிறுவனமான சாகியா செல்லுலாய்ட்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். முஜிபூர் இப்படத்தை இயக்குகிறார். இவர்

Close