திரைப்பட பி.ஆர்.ஓ. சங்கத்தின் முப்பெரும் விழா: ஜனவரி 3ஆம் தேதி பிரமாண்டமாக நடக்கிறது!

திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் (சினிமா பி.ஆர்.ஓ) சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் அடுத்த (ஜனவரி) மாதம் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

தலைவராக டைமண்ட் பாபு, செயலாளராக பெரு.துளசி பழனிவேல், பொருளாளராக விஜயமுரளி பொறுப்பேற்றுள்ள திரைப்பட பி.ஆர்.ஓ. சங்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ் சினிமாவில் 1958ஆம் ஆண்டு ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தின்  மூலம் மக்கள் திலகம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள், திரு. பிலிம்நியூஸ் ஆனந்தன் அவர்களை “மக்கள் தொடர்பாளராக” நியமித்து திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

அதன் பின்னர் டாக்டர் கலைஞர் முதல்வரான பின் எங்கள் பிதாமகன்  பிலிம்நியூஸ் ஆனந்தன்  அவர்களுக்கு “கலைமாமணி” விருது வழங்கி கௌரவப்படுத்தினார்.

அதன் பிறகு முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் பிலிம்   நியூஸ் ஆனந்தன்  அவர்களின் திரையுலகின் சேகரிப்பான தகவல் மற்றும் புகைப்படங்களுக்கு நிதி கொடுத்து வாழ்த்தினார்.

ஆகவே எங்கள் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு  விழாவையும், 1958-ல் மக்கள் தொடர்பாளர் என்ற தொழில் துவங்கப்பட்டு 60ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டிய விழாவையும், திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கம் 1993ஆம் ஆண்டு  பதிவு செய்யப்பட்ட 25 ஆண்டு வெள்ளி விழாவையும் சோ்த்து முப்பெரும் விழாவாகக்  கொண்டாட உள்ளோம்.

விழாவில் எம்.ஜி.ஆர் அவர்களின் திரைப்படங்களில் பணியாற்றிய நடிகர் – நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவப்படுத்த உள்ளோம்.

சங்கம் சார்பில் மலர் ஒன்றையும் வெளியிட உள்ளோம்.

இசையமைப்பாளர் இன்னிசை வேந்தர் டாக்டர் (சங்கர்) கணேஷின் திரைப்பட  இன்னிசை நிகழ்ச்சியும், நடன இயக்குனர் கலா மாஸ்டர் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் படப் பாடல்கள் மட்டும் இடம் பெறுகிறது.

தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், துணை முதல்வர், செய்தித் துறை அமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்டு, டிஜி்ட்டல் தயாரிப்பாளர்  சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், திரைப்பட இயக்குனர்கள் சங்கம் , திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளுக்கும் கடிதம் கொடுத்துள்ளோம்.

வரும் ஜனவரி மாதம் (2018) 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் இந்த முப்பெரும் விழா முழுக்க முழுக்க திரைத்துறை சம்பந்தப்பட்ட விழாவாக நடத்த திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Read previous post:
0a1d
Velaikkaran Movie – Vaa Velaikkara Lyric Video

Song - Vaa Velaikkara Movie - Velaikkaran Composed by Anirudh Ravichander Lyrics by Vivek Director - Mohan Raja Starring -

Close