மோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க!

எப்படி ஜீ உங்களுக்கு மட்டும் இந்த ஐடியா வந்துச்சு…ஜீ? அம்பானி, அதானி, சுப்பிரமணியசாமி ஏதாவது சைடிஸ் கொடுத்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி வைச்சாங்களா…. ஜீ?

ஏங்க ஜீ…! ஆதார் அட்டைய காட்டி பணத்தை மாற்றிக் கொள்ளலாமுன்னு சொல்றீங்களே…. அப்பறம் ஏங்க ஜீ திடீர்ன்னு 500,1000 ரூபாயே செல்லாதுன்னு சொல்றீங்க?

“இனியும் யாராவது 500, 1000 ரூவா நோட்டு வைச்சிருந்தா. அடுத்த மாசம் (டிசம்பர்) 30ம் தேதிக்குள் ஆதார் அட்டையோட வங்கில ரூவாய கொடுக்கனும். அதுக்கு பதிலா வேற நோட்டு வழங்குவோம். அதுவரை இந்த நோட்டு செல்லும். அதுக்கு பின்னாடி செல்லாது”ன்னு அறிவித்திருக்கலாமே….ஜீ.

ஒருவேளை கோடிகோடியாக வந்து மாற்றினாலும் யாரோட ஆதார் எண்ணுல மாத்துறாங்கன்னு கண்டுபிடிச்சிருக்கலாமே ஜீ. அவங்க மேல நடவடிக்கை எடுத்து ஜெயில்ல போடலாமே….ஜீ.

ஒருவேள ஆதார் அட்டைய சரிபார்க்கும் வசதி இல்லைன்னு நினைச்சீங்களா ஜீ…? அதான் ஜீ, நாம முகேஷ் அம்பானிகிட்ட கொடுத்திருக்க மொத்த ஆதார் விபரத்தையும் வாங்கி காப்பி போட்டுகளாமே ஜீ. முகேஷ் நம்மகிட்ட சொன்னபடி ஜியோ சிம்மு பேருல மூனு மாசமா கருப்ப வெள்ளையாக்கிட்டாருல்ல ஜீ… அவரு சொன்னபடிதான ஜீ நீங்களும் டிசம்பர் 31 வரை கெடு கொடுத்திருக்கீங்க ஜீ..

ஆமாங்க ஜீ.. எனக்கு ஒரு டவுட்டு… பெரும்பாலான பணம் வெளிநாடுகள்ல… சுவிஸ் வங்கியில… டாலரா இருக்கிறதாமே ஜீ. அத எப்படி ஒழிப்பீங்க ஜீ…. இல்லாட்டி ஒரு ரெண்டு மணி நேரத்துல இனி டாலரும் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமுன்னு ஐடியா வச்சிருக்கீங்களா ஜீ….

பல பேரு கருப்பு பணத்த தங்கம், வைரமுன்னு மாத்தி வைச்சிருக்காங்கலாம் ஜீ.. இனி தங்கம் செல்லாதுன்னு அறிவிச்சிடலாமா ஜீ? இனிமே காவி டைமண்ட் மட்டுந்தான் செல்லுமுன்னு சொல்லிடலாம் ஜீ…

அதுமட்டுமா ஜீ… தொழில் நட்டமுன்னு மஞ்ச நோட்டீஸ் கொடுத்துட்டு,… கருப்பு பணத்த வைச்சு வேறு பேருல புதுசா கம்பெனி தொடங்கியிருங்காங்களாம் ஜீ. அத எல்லாத்தையும் அகண்ட பாரத் சுதேசின்னு பேர மாத்த சொல்லி கருப்ப வெள்ளையாக்கிடலாம் ஜீ….

அது இருக்கட்டும் ஜீ… உங்கள பத்தி சரியா புரிஞ்சுக்காம வகைதொகையா கோடிக்கணக்கான மக்க மாட்டிக்கிட்டாங்களே ஜீ…. அவுக கேட்டா என்ன செய்யலாம் ஜீ.. புரியலையா ஜீ..

அதான் ஜீ.. சாதாரண அப்பாவி மக்க கிரிடிட் கார்டும் இல்லாம, டெபிட் கார்டும் இல்லாம இருப்பாங்களே ஜீ.. அவங்க கேட்டா நாம என்ன சொல்றது ஜீ..

ஆத்திர அவசரத்துக்கு ஒதவட்டுமுன்னு ஒரே நோட்டா மாத்தி கடுகு டப்பாவில ஒழிச்சு வச்சிருப்பாங்ளே ஜீ.. டூரிஸ்ட் போகும் போது நிறைய பணத்த எடுத்துட்டு போனா ரிஸ்க்ன்னு பேங்குல 500, 1000 நோட்டா வாங்கி வந்திருப்பாங்களே ஜீ… அவங்க எப்படி ஊரு திரும்புவாங்க ஜீ…

இதுபோல நாம உண்டு நம்ம வேலையுண்டுன்னு இருக்கீறவங்கள அல்லாட வைச்சீட்டீங்களே ஜீ. அவனுங்க எல்லாம் கேட்டா என்ன சொல்றது ஜீ.. இதுதான் பாகிஸ்தானை காலி செய்யும் சர்ஜிக்கல் கரன்ஸி ஸ்டிரைக்குன்னு சொல்லி ரூட்ட மாத்திடலாமுன்னு நீனைக்கிறீங்களா ஜீ.

எல்லாம் சரிதான் ஜீ. ஏற்கனவே கருப்பு பணம் வைச்சிருக்கவீங்க பட்டியல் இருக்கில்ல ஜீ.. அவங்க பேர மொதல்ல சொல்லுன்னு யாராவது கேட்டா என்ன செய்றது ஜீ.. உள்நாட்ட காட்டி கொடுத்திட்டான்னு தேச துரோக வழக்கு போடாலாமுன்னு ஐடியா வைச்சீருக்கீங்களா ஜீ..

ஏங்க ஜீ.. எவனாவது ஞபாகம் வைச்சு, அடுத்து சர்ஜிகல் வேகத்துள்ள எப்ப ரூ 15 லட்சம் எங்க அக்கவுண்டுல வந்து விழுமுன்னு கேட்டா என்ன செய்றது ஜீ… அமெரிக்க தேர்தல்ல அதிபரானதும் டாலரா தர்ரேன்னு சொல்லிடலாமா ஜீ…

நம்ம சூப்பர் ஸ்டார்கூட உங்க சர்ஜிக்கல் கரன்சி ஸ்டிரைக்க பாராட்டிருக்காரு ஜீ. இனி அவரு படத்துக்கு டிக்கெட்ல போட்டிருக்க விலையிலதான் விக்க போறாராம் ஜீ! நீங்க கவலப்படாதீங்க.. அடுத்து புதிய இந்தியா பிறக்க போகுதாம் ஜீ. அப்ப மோடிங்குற பேர “டிமோ“ ன்னு ரைமிங்கா மாத்திடலாம்னு நினைக்கிறீங்களா ஜீ… அப்படியே கோஷத்தையும் பாரத மாதாவுக்கு கோவிந்தான்னு மாத்திடலாம்னு யோசிக்கிறீங்களா ஜீ.. ..

உங்க அறிவ நெனச்சா… புல்லரிக்குது…. ஜீ. ச்ச்… சீசீ…………… ச்சீ…..

எம். கண்ணன்

Courtesy:theekkathir.in 

Read previous post:
0a
“500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது”: மோடியின் ‘துக்ளக் தர்பார்’ நடவடிக்கை!

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பல லட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வருவோம். அதை பிரித்து ஒவ்வொரு இந்திய

Close