அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனை முந்தினார் டொனால்டு ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தொழிலதிபர் டொனால்டு ட்ரம்ப், தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை விட கூடுதல் வாக்கு பெற்று முன்னிலை வகிக்கிறார்.

அதிபர் தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கக் கூடிய ப்ளோரிடா, வடக்கு கரோலினா, ஓஹியோ, அயோவா மாகாணங்களில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதால், அவர் அதிபர் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகியுள்ளன.

வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரம்:

வெற்றிக்கு தேவை 270 இடங்களில் வெற்றி.

இவற்றில், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் 244 இடங்களிலும், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி 215 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.

Read previous post:
0a
மோடிஜீ, உங்க அறிவை நினைச்சா புல்லரிக்குது… போங்க!

எப்படி ஜீ உங்களுக்கு மட்டும் இந்த ஐடியா வந்துச்சு…ஜீ? அம்பானி, அதானி, சுப்பிரமணியசாமி ஏதாவது சைடிஸ் கொடுத்து இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை தொடங்கி வைச்சாங்களா…. ஜீ? ஏங்க

Close