“21ஆம் நூற்றாண்டின் துக்ளக்” மோடி அறிவிப்பால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1456 உயர்வு!

இந்திய சரித்திரத்தில், “புழக்கத்தில் இருக்கும் பண்ம் இப்போதிருந்து செல்லாது” என திடீரென அறிவித்து, சாமானிய மக்களை திக்குமுக்காடச் செய்த மன்னர் முகமது பின் துக்ளக். அவரை போல, ‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ ஆன நரேந்திர மோடி, ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்ததைத் தொடர்ந்து தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாளில் ரூ.1,456 உயர்ந்துள்ளது.

கையில் இருக்கும் கருப்புப் பணத்தை தங்கமாக மாற்றிக்கொள்ள ஏராளமானோர் நகைக் கடையில் குவிந்து வருவதால் தங்கம் விலை ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று சில்லறை விற்பனையில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.182 உயர்ந்து ரூ.3,060க்கு விற்பனையாகிறது.

ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,456 உயர்ந்து ரூ.24,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.3,166க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து 48.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.910 உயர்ந்து, ரூ.44,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.