தமிழ்நாட்டில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு!

கொரோனா 2-வது அலை காரணமாக தமிழ்நாட்டில்  கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 4 மாதங்களுக்கு பின் இன்று (23-08-2021)  மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. இரு தினங்களுக்கு முன்பு இதற்கான  அறிவிப்பு வெளியிடபட்டதால், புதுப்படங்கள் எதுவும் இன்று ரிலீசாகவில்லை. மேலும் இன்று குறைவான அளவிலேயே திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன.

அக்‌ஷய் குமார் நடித்துள்ள இந்தி படமான ‘பெல்பாட்டம்’, ஹாலிவுட் படமான ‘காட்ஸில்லா vs கிங்காங்’, சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ உள்ளிட்ட படங்கள் மட்டுமே இன்று திரையிடப்பட்டுள்ளன. இதில் ஒரே ஒரு தமிழ் படம் மட்டுமே ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இனி வரும் வாரங்களில் ரிலீசுக்கு காத்திருக்கும் சின்ன படங்கள் வெளியாகும் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அப்போது இயல்பு நிலை திரும்பும் என திரைத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Read previous post:
0a1a
தோழர் சங்கரய்யாவுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள 'தகைசால் தமிழர்' விருது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. இது தொடர்பாக

Close