“கடவுளின் பெயரால் ஏசு செய்ய சொன்னதை புரட்சியின் வெற்றியால் செய்திருக்கிறோம்!” – காஸ்ட்ரோ

“உங்கள் ஏசு சொன்னதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

பசித்தவருக்கு ரொட்டி கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் பசியால் வாடுகிறவர்கள் இல்லை.

அறியாமையில் உழல்வோருக்கு அறிவுப் பாதையைத் திறக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் எல்லோருக்கும் ஒரே தரமான கல்வியை அரசாங்கமே தன் பொறுப்பில் அளிக்கிறது.

நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் யாராக இருந்தாலும் பாகுபாடில்லாமல் உயர்ந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது.

குளிரில் வாடுகிறவர்களுக்குக் கூரை கொடுக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் வீடின்றி வீதியில் நிற்போர் ஒருவரையும் காட்ட முடியாது.

அடிமைத் தளையிலிருந்து மீட்டு விடுதலையளிக்கச் சொன்னார் அவர். எங்கள் நாட்டில் சுயமரியாதையோடு உழைத்து வாழ்வதற்கென எல்லோருக்கும் வேலை உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் கடவுளின் பெயரால் செய்யச் சொன்னார் ஏசு. நாங்கள் புரட்சியின் வெற்றியால் செய்துகொண்டிருக்கிறோம்.

இறை நம்பிக்கை என்பதில் நாம் விலகி நிற்கலாம். ஆனால் மனிதர்களின் விடுதலை, சமத்துவம், பிணியற்ற வாழ்வு, அறிவொளி வெளிச்சம், சமூக மதிப்பு… இவை நாம் சந்திக்க வேண்டிய புள்ளிகள் அல்லவா?”

–  அமெரிக்காவில் செய்யப்பட்டுவரும் மோசமான பிரச்சாரத்தின் உண்மையை அறியும் நோக்கத்துடன் தன்னைச் சந்தித்த கிறிஸ்துவ பேராயர்கள் குழுவிடம் இப்படிச் சொன்னவர் கியூபா புரட்சி நாயகர் பிடல் காஸ்ட்ரோ.

செவ்வணக்கம் தோழர்.

Kumerasan Asak

Read previous post:
0a1j
தன் மரணத்தை முன்னறிவித்த புரட்சி நாயகன் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார்!

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. உடல்நலம் குன்றியிருந்த பிடல், வெள்ளிக்கிழமை (நவ.25) இரவு 7 மணிக்கு இயற்கை எய்தியதாக

Close