லட்சியவாதிகள் சாவதில்லை: பிரபாகரனை போலவே காஸ்ட்ரோவும் வாழ்கிறார்!

புரட்சியின் தீயை நெஞ்சில் ஏந்தி, லட்சியத்தின் வேட்கையோடு போராட்டத்தை வாழ்க்கையாக்கிக் கொண்டவர்களுக்கு, மரணம் என்பது முடிவல்ல. அவர்களது லட்சியம் வெல்லும் வரையில் அவர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். வென்ற பிறகு அந்த லட்சியமாய் ஒளிர்ந்து நிற்பார்கள். வரலாற்றில் ஒளி வீசி வாழ்வார்கள்.

‘மாவீரர் தினம்’ கொண்டாடப்படும் இந்த நாளில் ஃபிடெல் காஸ்ட்ரோ மறைந்திருக்கிறார். எந்த லட்சியத்துக்காக அவர் போராடினாரோ அந்த லட்சியம் உயிரோடுதான் இருக்கிறது – பிரபாகரனுக்கு இருப்பதைப் போலவே.

பிரபாகரனைப் போலவே காஸ்ட்ரோவும் வாழ்கிறார். அவர்களது போராட்ட வாழ்வுமுறை பெற்ற வெற்றியைப் போல போராட்டங்களும் வெற்றி பெற வேண்டும்.

எதேச்சதிகாரங்களிடமிருந்து முழுமையான விடுதலையை நோக்கிய சமரசமற்ற போராட்டமே காஸ்ட்ரோவிற்கு செலுத்தப்படும் அசலான மரியாதை. அதை நோக்கி அவரது பயணத்தை தொடர்வோம்.

மாவீரர்கள் மறைவதில்லை. அவர்கள் நாம் முன்னெடுக்கும் பணிகளில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள்.

SUNDAR RAJAN