நரேந்திர மோடிக்கும் பிடல் காஸ்ட்ரோவுக்கும் இதுதான் வித்தியாசம்!

பெருசா ஒண்ணும் தெரியாது. ஒரு நாட்டோட லீடர், அவரு இறந்துட்டாரு. பிடல் காஸ்ட்ரோ, பேருகூட கவர்ச்சியா இருக்கும். எல்லாரும் அந்த செய்தியை பகிர்ந்துக்கிறாங்க. நானும் பகிர்ந்துக்கிறேன், அவ்ளோதான். தெரியல, செவ்வணக்கம்னு சேர்த்து எழுதுறாங்க. நானும் எழுதுறேன்…

பிடலுக்கு செவ்வணக்கம் செய்யும் தகுதி நம்ம நாட்டுல இப்பிடித்தான் இருக்கு.

பிடலுக்கு செவ்வணக்கம் செலுத்துறாங்க… நீங்களும் ஷேர் பண்றீங்க. நேத்து 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கும் செவ்வணக்கம் செலுத்துனாங்களே, கவனிச்சீங்களா…?

பிடலுக்கு அஞ்சலி செலுத்துறதுக்கும், போன மாசம் 30 போராளிகள் சுட்டுக் கொல்லப்பட்டப்ப அஞ்சலி செலுத்தாததுக்கும் இடையில ஏதோ மிஸ் ஆகுதே, கவனிச்சீங்களா…?

இந்த அறியாமைக்கு என்ன காரணம்? நாம இருக்கற எடத்துல நடக்குற செவ்வணக்கம், நம்ம கவனத்துக்கே வராம போறதுக்கு என்ன காரணம்?

உலகத்துல எத்தனையோ நாட்டு தலைவர்கள்கூட தான் இறக்குறாங்க… இந்த குட்டி நாட்டு தலைவருக்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்…?

அறுநூத்தி சொச்சம் முறை அமெரிக்கா அவரை ஏன் கொல்ல முயன்றதுன்னு யோசிக்கிறோமா?

அவரு நமக்கான அரசை அமைத்தாருய்யா… உழைக்கும் மக்களின் அரசு…!

அப்போ, நரேந்திர மோடி அமைச்சது நமக்கான அரசு இல்லையான்னா, இல்லைய்யா… அவரு அம்பானி  -அதானிகளுக்காக அரசை அமைச்சிருக்காரு..!

அமெரிக்க சுகர் முதலாளிகளின் ஆலைகளை நாட்டுடமை ஆக்கி மக்களிடம் கொடுத்தாரு பிடலு. மோடி, அரசு பேங்க்ல ரிலையன்ஸ் மொதலாளிங்க வாங்குன கடனை தள்ளுபடி பண்ணிட்டு, நம்ம புள்ளைங்களுக்கு நாம வாங்குன கல்விக் கடனை ரிலையன்ஸை வசூலிக்கச் சொல்லிட்டாரு பாருங்க… இதுதான் பிடல் அரசுக்கும், மோடி அரசுக்கும் வித்தியாசம்!

அதனாலதான் அமெரிக்கா அத்தனை முறை பிடலை கொல்ல முயன்றது! வரக்கூடாதுன்னு தடை போட்டு வச்சிருந்த மோடிய, கட்டித்தழுவி வரவேற்குது!

நரேந்திர மோடி, மன்மோகன சப்போர்ட் பண்ற மக்கள் பிடலுக்கு அஞ்சலி செலுத்த எந்த தகுதியும் இல்லாதவர்கள்ய்யா..!

அதென்ன செவ்வணக்கம்?

உலகில் கம்யூனிஸ்ட்கள் தான் நமக்கான படைகள். உழைக்கும் மக்களின் உண்மையான தோழர்கள். நாம் இன்று அனுபவிக்கும் அத்தனை உரிமைக்கும் சொந்தக்காரர்கள்.

தங்கள் சுக துக்கத்தை இழந்து, ஏதோ ஒரு மூத்திர சந்தில், தெருவோரத்தில் கவனிப்பாரற்று, செங்கொடி உயர்த்தி போராடும் கம்யூனிஸ்ட்கள், நமக்கான ஏதோ ஒரு உரிமைக்காகத்தான் போராடிக் கொண்டிருப்பார்கள்.

கம்யூனிஸ்ட்களை மதியுங்கள். பிடலுக்கு அஞ்சலி செலுத்தும் தகுதி அதுதான்.

நாமெல்லாம் செவ்வணக்கம் செலுத்த உரிமையுள்ள மக்கள். உழைக்கும் மக்கள். நமக்கான தத்துவத்தை, அரசை, தொலைத்துவிட்டுத் திரியும் ஆட்டு மந்தைகள். இதுபோன்ற நிகழ்வுகளில் தெளிந்தால்தான் உண்டு…

அப்புறம், ஒரு வந்தேறியான சேகுவேராதான் கியூபா மக்களின் விடுதலையில் பிடலுக்கு உண்மையாக இருந்தார். நமக்காக போராடுற மக்களை வேத்து இனத்தான்னு பாக்குற குறுக்கு புத்தியுள்ளவங்களும் பிடலுக்கு அஞ்சலி செலுத்த எந்த அருகதையும் அற்றவர்கள்!

Anbe Selva