“டிசம்பர் 4ஆம் தேதி பிடல் காஸ்ட்ரோவுக்கு இறுதி பிரியாவிடை”: கியூப அரசு

கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கியூபாவில் காஸ்ட்ரோ மறைவையொட்டி 9 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் கியூப அரசு தெரிவித்துள்ளது.

கியூப புரட்சியின் நாயகனும், அந்நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90.

பிடல் காஸ்ட்ரோவின் இறுதிச் சடங்குகள் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் என்று அந்நாட்டு அதிபரும், பிடல் காஸ்ட்ரோவின் சகோதரருமான ரவுல் காஸ்ட்ரோ முதலில் தெரிவித்திருந்தார். ஆனால், மாபெரும் தலைவருக்கு உலகத் தலைவர்களும், மக்களும் அஞ்சலி செலுத்த வசதியாக, அவரது இறுதிச் சடங்குகளை டிசம்பர் 4ஆம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.