எங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா…?

கொரொனா மரணங்களை, ஆக்சிஜன் பற்றாக்குறையை சாக்காக வைத்து இலாபகரமான தன் கம்பெனியை மீண்டும் திறக்க வேண்டும் என்பதைத் தவிர வேதாந்தாவுக்கு வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்? சாவு வீட்டில் வாரி சுருட்டப் பார்க்கிறான் வேதாந்தா.

மக்கள் மீது திடீர் பாசம் பொங்கியதால் தான் வேதாந்தா கம்பெனியைத் திறக்க கேட்கிறான் என்பதை , கம்பெனியைத் திறந்தால் sterlite ஆக்சிஜனை மட்டும் தான் உற்பத்தி செய்யும் என்பதை குழந்தைகூட நம்புமா ?

ஸ்டெர்லைட் கம்பெனி மீண்டும் செயல்பட ஆரம்பித்தால்… தற்போதைய சூழலில் ஒரு சிறிய அளவு போராட்டத்திற்கேனும் சாத்தியம் உண்டா ?

தூத்துக்குடி மக்கள் கொரொனாவையும் , லாக் டவுனையும் சமாளிப்பார்களா ? இல்லை.. மீண்டும் sterlite க்கு எதிராக போராடிக் கொண்டிருப்பார்களா?

ஆக்சிஜன் பற்றாக்குறை என்பதை சாக்காக வைத்து , ஆலையைத் திறந்தால் தற்போதைய சூழலில் மக்களால் எதிர்ப்பைக் காட்ட முடியாது என்னும் வாய்ப்பை வைத்து.. Master move செய்திருக்கிறான் வேதாந்தா !! பெருமுதலாளியின் லாபியை வெல்ல முடியாமல் எல்லோரும் பணிந்து போயிருக்கிறீர்கள். அவ்வளவு தான்.

நாட்டுக்கு தேவைப்படும் ஆக்சிஜனை விரைந்து உற்பத்தி செய்ய ஓராயிரம் வழிகள் இருக்கிறதென்பது சாமான்யர்களுக்கும் புரிய வரும் நிலையில், அந்த வழிகளை மேற்கொள்ள அரசுகளை வற்புறுத்தாமல்… Sterlite ஐ விட்டால் வேறு கதி இல்லை என வாய்க்கூசாமல் புளுகுகிறீர்களே?

பாசிச பாஜக இப்போ sterlite வழியாக உள்ளே புகுந்துடுச்சே… என்ன செய்யப் போறீங்க ? எங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கு போட்டது வீணா ?

13 உயிர்கள வெச்சு ஓட்டு கேட்டீங்களே ? இப்போ அவர்கள் மீது மீண்டும் தோட்டாக்களை இறக்கியிருக்கிறீர்களே ?

நவீன அறிவியல் நவீன அறிவியல் எனக் கூவும் தோழமை பூசாரிகள்..  ஆக்சிஜன் உற்பத்தி குறித்த அடிப்படை தகவல்களையாவது படித்துவிட்டு sterlite – திமுக வுக்கு முட்டுக் குடுத்திருக்கலாம்.

Arun Bhagath