“அடிச்சான் பாரு பிஜேபி கவர்மெண்ட் அடுத்த ஆப்பு தமிழகத்துக்கு…!”

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வாய்ப்புள்ள நகரங்களின் பட்டியல் கேட்டது மத்திய அரசு.

உடனடியாக எட்டு நகரங்களின் பட்டியலை தமிழக முதல்வர் அவர்கள் தெரிவித்ததோடு, அடிப்படை கட்டமைப்புகள் உடனடியாக செய்து தரப்படும் என்றும் அறிவித்தார்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமையத் தேவையான இருநூறு ஏக்கர் நிலம், நாற்கரச் சாலை வசதி, ரயில் நிலையம், பிற அத்தியாவசிய கட்டமைப்புகள் அடிப்படையில்,

மதுரை மற்றும் ஈரோடு-பெருந்துறை ஆகிய இரண்டு நகரங்கள் இறுதித் தகுதி நிலை பெற்றன.

மதுரையில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைய உள்ளதால்,

ஈரோடு மாவட்டம், பெருத்துறையில் உள்ள IRTT மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குப் பின்புறம் உள்ள 340 ஏக்கரில் வேண்டிய அளவு இடம் தரத் தயார் என மாநில அரசு அறிவித்தது…

காசநோய் சிகிச்சையில் தமிழக அளவில் புகழ்பெற்ற சானடோரியம் மருத்துவமனை, நூற்றுக்கும் மேல் படுக்கை வசதி, பயிற்சி மருத்துவர்கள் அனைத்தும் உள்ளது…

இங்கு எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், சேலம், தர்மபுரி ஆகிய எட்டு மாவட்ட மக்கள் பயன்பெறுவார்கள். அனைவருக்கும் நூறு கிலோமீட்டர் தொலைவில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும்.

ஆய்வுகள் எல்லாம் முடிந்து, அனைத்தும் தயார் என்ற நிலையில்,

தற்போது மோடி அரசு, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கத் தகுதியான நகரம் ஒன்று கூட இல்லை என்று உண்மைக்குப் புறம்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் பின்னணியில் இரண்டு தென்னகம் சார்ந்த மத்திய அமைச்சர்கள் உள்ளதாகத் தகவல்.

கர்நாடகம், ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களில் ஒன்றுக்குக் கொண்டு செல்லக் கடும் முயற்சி நடக்கிறது.

இங்குள்ள மத்திய அமைச்சர், தேசிய செயலாளர், மாநிலத் தலைவி அனைவரும் வழக்கம் போல “எங்க மோடிஜி யாரு தெரியுமா: என பெருமை பீத்திக்கொண்டு திரிவார்கள். ஒரு ஆணியையும் ——- மிச்சர் திங்கத் தான் லாயக்கு…

இனி ஒரு கும்பலே இந்தப் பதிவுக்கு பாரத் மாதாகி ஜே என்று ஓடிவந்து, முட்டுக் கொடுக்கும்…

காய்லாங்கடை அணுஉலைகள், நியூட்ரினோ ஆராய்ச்சி, மீத்தேன், கெயில் இவைகளுக்கு தமிழ்நாடு வேணும்; எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழ்நாட்டில் எந்த நகரமும் தகுதியில்லையா?
தமிழக மக்கள் சிந்திப்பார்களா?

– யாரோ

Read previous post:
0a1
வில்லங்கமாய் விஸ்வரூபம் எடுக்கும் ‘போகன்’ கதை திருட்டு விவகாரம்!

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'போகன்'. பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு

Close