‘போகன்’ கதைக்கு உரிமை கொண்டாடும் இருவருமே ஆப்பிரிக்க படக்கதையை திருடியிருப்பது அம்பலம்!

லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘போகன்’. பிரபுதேவாவின் ‘பிரபுதேவா ஸ்டூடியோஸ்’ நிறுவனம் தயாரித்துவரும் இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாக இருக்கிறது.

வில்லங்கம் என்னவென்றால், இப்படத்தின் கதை தன்னுடையது என்று ஆண்டனி தாமஸ் என்பவர் புகார் கூறிவருகிறார். “நான் ‘அல்வா’ என்று எழுதிய கதையைத் தான் ‘போகன்’ என்ற தலைப்பில் மாற்றி செய்திருக்கிறார்கள்” என்கிறார் அவர். இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறார்.

ஆண்டனி தாமஸின் புகாரை மறுக்கும் ‘போகன்’ இயக்குனர் லட்சுமணன், இது தன்னுடைய கதை தான் என்றும், பொய்யை பரப்பும் ஆண்டனி தாமஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர்  அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக இருவரிடமும் விசாரணை செய்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. “இயக்குனர் லட்சுமணனின் ‘போகன்’ கதையும், ஆண்டனி தாமஸின் ‘அல்வா’ கதையும் அவர்களுடைய சொந்த படைப்பு அல்ல. இருவருமே ஒரு ஆப்பிரிக்கப் படத்தின் கதையை தழுவித்தான் கதை அமைத்துள்ளார்கள். மேலும், இருவர் கதைகளிலும் உள்ள காட்சிகள் வேறு சில ஆங்கிலப் படங்களிலிருந்து தழுவி உருவாக்கப்பட்டுள்ளன” என்பது தான் அது.

இது குறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை:-

0a

0a1

0a1a