மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்!

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

சமீபகாலமாக அடிக்கடி மருத்துவ பரிசோதனைக்காக ரஜினி அமெரிக்கா சென்று வருகிறார். ‘கபாலி’ படம் வெளியிடப்படும் நேரத்தில்கூட அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்காவில் இருந்தார்.

இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ படத்தில் தொடர்ச்சியாக நடித்துவந்த ரஜினிகாந்த், பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார்.

ம்ருத்துவ பரிசோதனை முடிந்துவிட்ட நிலையில், குடும்பத்தினருடன் சேர்ந்து தீபாவளியை கொண்டாடுவதற்காக அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக நேற்றிரவு அவர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.

Read previous post:
0a1
கையெழுத்து போடும் நிலையில் ஜெயலலிதா இல்லை: ஃபார்ம் பி-யில் பெருவிரல் ரேகை பதிவு!

கடந்த (செப்டம்பர்) மாதம் 22ஆம் தேதி முதல் சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் இடது கை பெருவிரல்

Close