அப்புக்குட்டி நாயகனாக நடிக்கும் ‘காகித கப்பல்’ படத்தின் கதை!

9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன் கதையின் நாயகன். அவன் நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த இளம்பெண் ஒருத்தி இந்த கதைநாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்பந்தம் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவன் படிக்காதவனாகவும், அவள் படித்தவளாகவும் இருந்தும், தரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். ஆனால், கதாநாயகியின் ஒரேயொரு ஆசையால் அந்த தம்பதியரின் வாழ்க்கை ‘காகித கப்பல்’ ஆகிவிடுகிறது…

சிவபாலன் (எ) அப்புக்குட்டி கதையின் நாயகனாகவும், டில்லிஜா என்ற புதுமுகம் கதாநாயகியாகவும் நடிக்கும் ‘காகித கப்பல்’ படத்தின் அடிப்படை கதை தான் மேலே சொல்லப்பட்டிருக்கிறது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.சிவராமன். இவர் ஏற்கெனவே ‘மறந்தேன் மெய்மறந்தேன்’, ‘சொல்லித்தரவா’, ‘அன்பா அழகா’ ஆகிய படங்களை இயக்கியவர்.

எவர்க்ரீன் மூவி இன்டர்நேஷனல் சார்பில் வி.ஏ.துரை தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே ‘என்னமா கண்ணு’, ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ போன்ற படங்களை தயாரித்தவர்.

‘காகித கப்பல்’ படத்துக்காக இசையமைப்பாளர் நிஜாம் இசையில் “வித்தைக்காரி ஜெகஜால வித்தைக்காரி…”, “ஆகாய கடலிலே காகித கப்பல்…” ஆகிய இரண்டு பாடல்களை கவிஞர் கலைகுமார் எழுதியுள்ளார். நடிகர் அஜித்குமாரின் பெருமைகளை அப்புக்குட்டி பாடும் விதமாக, “அம்மா அப்பா குடும்பத்தை பாரு…” என்ற பாடலை கவிஞர் விவேகா எழுத, சாண்டி நடனமாடி உள்ளார்.

ஒளிப்பதிவு – வெங்கி தர்ஷன்

படத்தொகுப்பு – யாசின்

கலை – சாய்குமார்

ஊடகத்தொடர்பு – நிகில்