அப்புக்குட்டி நாயகனாக நடிக்கும் ‘காகித கப்பல்’ படத்தின் கதை!

9 வயதிலிருந்து குப்பை சேகரித்து உழைப்பால் உயர்ந்தவன் கதையின் நாயகன். அவன் நேர்மையான உழைப்பு மற்றும் சேமிப்பை குறிக்கோளாக வைத்து வாழ்பவன். படித்த இளம்பெண் ஒருத்தி இந்த கதைநாயகனின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். நிர்பந்தம் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். அவன் படிக்காதவனாகவும், அவள் படித்தவளாகவும்