கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்ட ‘புழுதி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

எக்ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் சார்பில் இ.சந்தீப் தயாரித்துள்ள படம் ‘புழுதி’. இந்த படத்தில் நந்தா, சானியாதாரா, ரஞ்சித், சரண்ராஜ், பவர்ஸ்டார் சீனிவாசன், நீலியா, ஜானி, பாண்டி ரவி, யுவராணி, சுஜா, அனுஷா  உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்வர்தன் வில்லனாக அறிமுகமாகிறார்.

ஏழுமலை இயக்கும் முதல் தமிழ்ப்படம் இது. இதற்குமுன் இவர் ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ இயக்கிய, 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘லைஃப் ஆஃப் பை’ படத்தில் துணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

‘புழுதி’ படத்துக்கு ரமேஷ்.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். இவர் ‘திருடா திருடி’, ‘ஆழ்வார்’, ‘கிங்’ உட்பட 25 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

புதுச்சேரி அரசின் இளைஞர் மாமணி விருது பெற்ற உமர் எழிலன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பேரரசு, சினேகன், ப்ரியன், இளையகம்பன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படத்தொகுப்பு – டான் மேக்ஸ்

கலை இயக்கம் – வினோத்

நடனம் – ரவிதேவ், பாப்பி

சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன்

ஊடகத்தொடர்பு – எஸ்.ஷங்கர்

வடிவமைப்பு – சரவணன்

ஆயுத பூஜையையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். “இயக்குநர் ஏழுமலை கடின உழைப்பாளி. இந்த போஸ்டர்களைப் பார்க்கும்போதே படத்தின் தரம் தெரிகிறது. மிகப் பெரிய வெற்றி பெற மனமார வாழ்த்துகிறேன்” என்றார் தாணு.

0a1a