இயக்குனர் தனுஷின் ‘ப.பாண்டி’ படத்துக்கு ‘யூ’ சான்றிதழ்: ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ்!

நடிகர் தனுஷ் இயக்குனராக களமிறங்கும் ‘ப.பாண்டி’ (‘பழனிச்சாமி பாண்டி’) படத்தில் ராஜ்கிரண்  ஹீரோவாக நடிக்க, ஜோடியாக  ரேவதி நடித்துள்ளார். இவர்களுடன்  பிரசன்னா, சாயாசிங், வித்யுலேகா ராமன், ரின்ஸன், தீனா (அறிமுகம்), ஆடுகளம் நரேன், பாஸ்கர், மாஸ்டர் எம்.பி.ராகவன், பேபி சவி ஷர்மா, சென்ராயன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறப்பு தோற்றத்தில் மடோனா செபாஸ்டின். நட்பு தோற்றத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் பாலாஜி மோகன், ரோபோ சங்கர் மற்றும் திவ்யதர்ஷினி நடித்துள்ளனர்.

முன்னோட்டங்கள் மற்றும் இசை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இப்படம் தணிக்கை குழுவினருக்கு திரையிடப்பட்டது. படம் பார்த்த தணிக்கை குழுவினர் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

நடிகர் ராஜ்கிரணை, தனுஷின் தந்தையான கஸ்தூரி ராஜா முதன் முதலில் ஹீரோவாக அறிமுகப்படுத்திய ‘என் ராசாவின் மனசுல’ படம் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியானது. தற்போது அவர் மகன் தனுஷ், ராஜ்கிரணை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள ‘ப.பாண்டி’ ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை திருநாள் அன்று வெளியாக உள்ளது.

0

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு – தனுஷ்

ஒளிப்பதிவு – ரா.வேல்ராஜ்

இசை – ஷான் ரோல்டான்

பாடல்கள் – தனுஷ், செல்வராகவன், ராஜூ முருகன்

நிர்வாக தயாரிப்பு – எஸ். வினோத் குமார்

படத்தொகுப்பு – ஜி.கே. பிரசன்னா

நடனம் – பாபா பாஸ்கர்

சண்டைப்பயிற்சி – சில்வா

ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி

தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.பி. சொக்கலிங்கம்

 மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.

 

Read previous post:
0
‘8 தோட்டாக்கள்’ படம் பார்த்த பிரபலங்கள் பாராட்டு! 

8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையும், அசத்தலான

Close