‘8 தோட்டாக்கள்’ படம் பார்த்த பிரபலங்கள் பாராட்டு! 

8 தோட்டாக்கள் படத்தின் சிறப்பு காட்சி தமிழ் திரையுலக நட்சத்திரங்களுக்கு  பிரத்யேகமாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்த அனைத்து நட்சத்திரங்களும், 8 தோட்டாக்கள் படத்தின் தரமான கதையையும், அசத்தலான நடிப்பையும், திறமையான தொழில்நுட்ப வேலைகளையும் பாராட்டி வருகின்றனர்.

‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  –  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும் ‘8  தோட்டாக்கள்’  திரைப்படத்தை,  இயக்குநர் மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில்  புதுமுகம் வெற்றி – அபர்ணா பாலமுரளி – எம் எஸ் பாஸ்கர் – நாசர் ஆகியோர் முன்னணி கதாபாத்திங்களில் நடித்துள்ளனர்.  ஒட்டுமொத்த தமிழக  ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கும் ‘8 தோட்டாக்கள்’ படத்தை, வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று ‘சக்திவேல் பிலிம் பேக்டரி’ சார்பில்   வெளியிடுகிறார்  சக்திவேல்.

“எம் எஸ் பாஸ்கர் சாரின் சிறந்த நடிப்பை, மனித உணர்வுகளால் நிறைந்து இருக்கும்  இந்த 8 தோட்டாக்கள் படத்தில் காணலாம். வயதான பிறகு நம் பெற்றோர்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி  இருக்கின்றது 8 தோட்டாக்கள். நிச்சயமாக இந்த படத்தை குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறுகிறார் துருவங்கள் 16 படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன்.

“இயக்குனர் ஸ்ரீ கணேஷின் ஓர்  உன்னதமான படைப்பு தான் இந்த 8 தோட்டாக்கள். இந்த படத்தில் நடித்து இருக்கும் எல்லா நடிகர்களின் நடிப்பும், ஒளிப்பதிவு மற்றும் இசையும்  என்னை பெரிதளவில் கவர்ந்துவிட்டது. நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் ரசிக்கக்கூடிய ஒரு திரைப்படமாக 8 தோட்டாக்கள் இருக்கும்” என்று உற்சாகமாக கூறுகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு

“அனைவரையும் கவர கூடிய விதத்தில் இந்த 8 தோட்டாக்கள் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகிற்கு உத்வேகம் அளிக்க கூடிய ஒரு படமாக இந்த திரைப்படம் இருக்கும்” என்று கூறுகிறார் இயக்குநர் சசி.

“நான் என் வாழ்நாளில் பார்த்த மிக  சிறந்த படங்களுள் ஒன்று – 8 தோட்டாக்கள். இது முழுக்க முழுக்க இயக்குநர் ஸ்ரீ கணேஷின் 100 சதவீத உழைப்பாலும், அர்பணிப்பாலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ் திரையுலகில் ஓர் தனித்துவமான  அடையாளத்தை இந்த படம் பதிக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.