நெடுவாசல் போராட்ட களத்தில் தமிழர்களாக இணைந்த இஸ்லாமியர்கள்!

நெடுவாசல் போராட்ட களத்தில் இணைந்திருக்கும் இஸ்லாமியர்கள். சல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோதும் தங்களை இணைத்துக் கொண்டவர்கள். மதுரை தமுக்கத்திலேயே அடுப்பு போட்டு 7 நாட்களும் 24 மணி நேரமும் உணவு தயாரித்து கொடுத்ததை நேரில் பார்த்தேன்,

தமிழர்களாக போராட்ட களத்தில் இணைவதில் அவர்களின் மதம் தடையாக ஒருபோதும் இருந்ததாக தெரியவில்லை. சென்னை – கடலூர் பெருவெள்ளம், வரதா புயல் என அனைத்திலும் தமிழனாக கைகோர்க்கும் இஸ்லாமியர்களின் தமிழுணர்வு, ஏன் “இந்துக்களின் காவலர்கள்” என்று சொல்லிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் – இந்து முன்னணி கும்பலுக்கு வர மாட்டேன் என்கிறது? ஒரே மதம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஒரே கடவுள், ஒரே மொழி. ஆனாலும் நம் வாழ்வாதார போராட்டங்கள் எதிலும் பங்கடுக்காமல் எதிர்நிலையிலேயே நிற்கிறார்கள்.

இத்தனை ஒற்றுமைகளை சொல்லிக்கொண்டாலும் அதற்குள் அவர்களுக்கு என்ன தடையாக இருக்கிறது? அதை அறிந்துகொள்வதில் தான் தமிழர்களின் அரசியல் இருக்கிறது.

அதை எப்படி அறிந்து கொள்வீர்கள்?

“நீங்கள் இந்துவா?” என்றால், “ஆமாம்” என்பார்கள். “தமிழா?” என்றாலும் “ஆமாம்” என்பார்கள். பின்னே எப்படி கண்டுபிடிக்கிறது?.. அந்த குறிச்சொல் என்ன?.

“நீங்கள் திராவிடரா?” என்று கேளுங்கள். “ஹி… ஹி… ஆரியர்கள்” என்பார்கள். அதற்குள் இருக்கிறது இந்த துணைக்கண்டத்தின் எல்லா அரசியலும்..

ANBE SELVA

Read previous post:
0
“நெடுவாசல் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் தீர்ப்போம்! நீதிமன்றம் போகாதே! எச்சரிக்கை!”

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய

Close