“உள்ளே வந்துட்டான்; மோதிக்கிட்டே இருக்கணும்! இல்லேனா ‘வந்தேமாதரம்’ பாடி அடி வாங்கணும்!”

“பெப்சி  கம்பெனி தலைவர்  இந்திரா  நூயி  போய்  பிரதமரை  பார்ப்பது  குற்றமா?  அதனால்  என்ன ஆகிவிடும்?”  என்கிற  ரீதியில்  பேசுகிறவர்கள்  கவனிக்க வேண்டியவை  ஏராளமாக  இருக்கின்றன.

தாமிரபரணியில்  தண்ணீர்  எடுக்கலாம்  என்கிற  தீர்ப்பு  வந்திருக்கிறது  தமிழகத்தில்  பெப்சியின்  விற்பனை  சரிந்துள்ளதாக  சர்வதேச  ஊடகங்கள்  செய்தி  வெளியிட்டுள்ளன.  வணிகர்கள்,  மக்கள்  புறக்கணிக்கத்  துவங்கியுள்ளனர். இந்த  நேரத்தில்  இந்தச்  சந்திப்பு  முக்கியத்துவம்  பெறுகிறது

பன்னாட்டுக்  கம்பெனிகள்  தங்கள்  வியாபாரத்தில்  சின்ன  இடர்  வந்தாலும்  பொறுத்துக்  கொள்ள மாட்டார்கள்.  தங்களின்  அத்தனை  பலத்தையும்  காட்டுவார்கள்.  அதுதான்  வரலாறு

1600ஆம்  ஆண்டு  இந்தியாவிற்குள்  வந்த  கிழக்கிந்தியக்  கம்பெனி தான்,  1757ல்  ராபர்ட்  கிளைவ்  தலைமையில்  வங்காள  நவாப்  சிராஜ்  உத்  தவுலாவை  சூழ்ச்சி  மூலம்  பிளாசிப்  போரில்  வெல்கிறது.  157  வருடத்தில்  வியாபாரி  ஆட்சியாளானாக  உருவெடுக்கிறான்.  தனது  அதிகார  மையங்களை  நாடு  முழுக்க  பலம்  பெறச்  செய்து  அடுத்த  100  ஆண்டுகளில்  பிரிட்டிஷ்  ஆட்சியின்  கீழ்  இந்தியா  இருப்பதாக  டிக்ளர்  செய்யப்படுகிறது

பிறகு  இந்திய  வளங்களை,  இந்தியர்  உழைப்பைச்  சுரண்டி  அவன்  நாட்டிற்கு  கொண்டு  செல்வதற்கான  உள்கட்டமைப்பு  வசதிகளைச்  செய்து,  முடிந்தவரை  கொள்ளையடித்தான்.  ஒரு  தொண்ணூறு  வருடம்  ஆட்சி  அதிகாரத்தோடு  எல்லாம்  செய்துவிட்டு,  வரவுக்கும்  செலவுக்கும்  கணக்குப்  பார்த்தால்  நட்டம்  வந்த  காலகட்டத்தில்  சுதந்திரம்  தந்து  வெளியேறினான்.

நாம  புரட்சி,  கலகம்,  அகிம்சை,  சத்தியாக்ரஹம்னு  கத்திக்கிட்டு  கிடந்தோம்.  அடிபட்டோம்.  செத்தோம்.  அவன்  347  வருஷம்  செமத்தியா  செஞ்சுட்டுப்  போய்ட்டான்.

ஆகவே  மக்களே,  இந்த  கார்ப்பரேட்டுகள்  ஒரு  500  வருட திட்டத்தோட  வருவான்.  இப்போதைக்கு  அவன்  ஒரு  கம்பெனித்  தலைவர்.  பிரதமரோட  டிஸ்கஸ்  பண்ணிட்டு  போற  அளவு  வளர்ந்திருக்கான்

இன்னும்  ஒடச்சு  சொல்லணும்னா,  இங்க  யார்  ஆடசி  இருக்கணும்னு  அவன்தான்  முடிவு  பண்றான்.  அதனால  இந்த  அரசாங்கம்  அவன  செல்லமாத் தான்  வச்சிருக்கும்.  நாம  தான்  உஷாரா  இருக்கணும்.  அவன்  வளர்ச்சிய  தடுக்கணும்.  அவன  வியாபாரியாக்  கூட  அனுமதிக்கக்  கூடாது.

 ஆனால்,  உள்ள  வந்துட்டான்.  மோதிட்டே  இருக்கணும். இல்லைன்னா…

வந்தேமாதரம்  பாடி  அடி வாங்கணும்!  ஜெய்ஹிந்த்!

பொன் கார்த்திக்