‘கவலை வேண்டாம்’ படத்துக்காக அர்மான் மாலிக் பாடிய பாடல்!

ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கிவரும் படம் ‘கவலை வேண்டாம்’. இப்படத்தில் ஜீவா, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, சுனைனா, ஆர்ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மந்த்ரா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர்  அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இதன் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

“அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப் பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது.

“எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின்   “உன் காதல்…” என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது.

“மும்பையின் புகழ்பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். இந்த பாடல் நிச்சயம் தமிழக ரசிகர்களுக்கு  ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

Read previous post:
0a3x
+2 மாணவனும் 10ஆம் வகுப்பு மாணவியும் காதலிக்கும் கதை ‘எதிர் கொள்’

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட பல படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும்  படத்திற்கு ‘எதிர் கொள்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக

Close