மதுரைக்காரர் கெட்டப்பில் ரஜினி: ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் வெளியீடு

லைக்கா தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2 பாயிண்ட் ஓ’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடித்து முடித்தபின் ரஜினி சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்துவருகிறார்.

0a1b

‘பேட்ட’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ரஜினியோடு இணைந்து இந்தி நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இந்த பட்டியலில் நடிகரும் இயக்குனருமான சசிகுமாரும் சேர இருப்பதாகத் தெரிகிறது.

திரு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது..

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. தற்போது வாரணாசியில் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி. இதற்கான மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியிடப்பட்டது. இதில் ட்ரிம் செய்யப்பட்ட தாடி, கூலிங் கிளாஸ், கையில் கொடூர ஆயுதம் சகிதம் வரும் ரஜினி, பழமையான தேவாலயம் போன்ற ஒரு கட்டிடத்துக்குள் நுழைந்து ஆக்ரோஷம் காட்டுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று (அக்டோபர் 4) இரவு 7 மணிக்கு இப்படத்தின் இரண்டாவது லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, கன்னம் வரை நீட்டிவிட்டு முறுக்கிவிடப்பட்ட மீசை, நெற்றியில் பட்டை, புருவங்களுக்கு இடையில் குங்குமம் சகிதம் மதுரைக்காரர் போன்ற கெட்டப்பில் காட்சியளிக்கிறார் ரஜினி.

Read previous post:
n6
96 – விமர்சனம்

காதலனும், காதலியும் பிரிந்து சிலபல ஆண்டுகள் ஆனபின் மீண்டும் சந்தித்தால் எப்படியெல்லாம் கசிந்துருகுவார்கள், திரைப்பட பார்வையாளர்களின் இதயங்களை எப்படியெல்லாம் கசக்கிப் பிழிந்து கண்ணீர் மல்கச் செய்வார்கள் என்பதெல்லாம்

Close