டிஜிட்டலில் எம்.ஜி.ஆரின் ‘ரிக்‌ஷாக்காரன்’: 21ஆம் தேதி இசை வெளியீடு!

எம்.ஜி.ஆர் நடிப்பில், ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பில் 1971ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ரிக்‌ஷாக்காரன்’.

இந்த படத்தின் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார். அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தது.

“அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…”, “அழகிய தமிழ் மகள் இவள்…”, “கடலோரம் வாங்கிய காற்று…”, “பம்பை உடுக்கை கொட்டி…” என இந்த படத்தின் ஒவ்வொரு பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலம்.

45 ஆண்டுகளுக்குமுன் வெளியான ‘ரிக்‌ஷாக்காரன்’, தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி, மீண்டும் ஒரு முறை தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. இதன் முதற்படியாக  நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும்  ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, இம்மாதம் (ஆகஸ்ட்) 21ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.01 மணியளவில், சென்னை ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் நடைபெற இருக்கிறது.

ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கும் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர் – நடிகையர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கல ந்துகொள்கிறார்கள்.