+2 மாணவனும் 10ஆம் வகுப்பு மாணவியும் காதலிக்கும் கதை ‘எதிர் கொள்’

கோலிசோடா, வஜ்ரம், பசங்க உட்பட பல படங்களில்  நடித்த கிஷோர் கதாநாயகனாக நடிக்கும்  படத்திற்கு ‘எதிர் கொள்’ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை சினேகம் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக சி.பழனி, ஆர்.ஐய்யனார் இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

கதாநாயகியாக மேக்னா நடிக்கிறார். மற்றும் தென்னவன், சார்மிளா, காளிவெங்கட், அஜெய், சிவசங்கர், கண்ணன் பொன்னையா, விஜய்கணேஷ், அகிலேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஆர்.ஐய்யனார். படம் பற்றி இயக்குனர் ஆர்.ஐய்யனார் கூறுகையில், “இது முழுக்க முழுக்க கிராமத்து கதை. +2 படிக்கும் மாணவனுக்கும் 10வது படிக்கும் மாணவிக்குமான காதல். ஒரு ஆணுக்கு உள்ள உறவு சங்கிலியை அழகாக சித்தரிக்கும் படம். அப்பா – மகன் உறவு வெறும் ரத்தபந்தமான உறவாக மட்டுமல்லாமல் நட்பு ரீதியாக இருந்தால் அந்த உறவின் வலிமை பலமானதாக இருக்கும் என்கிற உட்கருத்தை உள்ளடக்கிய கதை இது. பொறுப்பில்லதவனாக கருதப்பட்ட மகன் ஒரு கட்டத்தில் எப்படி உயர்ந்தவனாகிறான் என்கிற உயரிய கருத்தை சொல்கிறோம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் விழுப்புரம், செஞ்சி, கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது” என்றார்.

ஒளிப்பதிவு   –  பாண்டி அருணாசலம்

இசை   – ஜூட் லினிக்கர்

பாடல்கள்   –  மணி அமுதன்

ஸ்டன்ட்  –  டேஜ்ஜர் மணி

கலை   –  தியாகு

நடனம்   –  சந்தோஷ்

எடிட்டிங்  –  ஜோதி பிரகாஷ்

தயாரிப்பு  மேற்பார்வை  –  எஸ்.எஸ்.ஸ்ரீதர்

ஊடகத்தொடர்பு – மௌனம்ரவி

Read previous post:
0a3v
Meet Jignesh Mevani, face of the Gujarat Dalit Agitation

Since the emergence of Hardik Patel from among the Patidars and Alpesh Thakor from among the OBCs during movements in

Close