ஆர்.நல்லகண்ணுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது!

தமிழக காங்கிரஸ் கமிட்டி எஸ்சி பிரிவு சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுக்கு டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் எஸ்சி பிரிவு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 125-வது பிறந்தநாள் விழா சென்னை புளியந்தோப்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

எஸ்.சி பிரிவு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மத்திய சென்னை மாவட்ட தலைவர் ரங்கபாஷியம், காங்கிரஸ் கட்சி தேசிய செயலாளர் திருநாவுகரசர், பொருளாளர் நாசே ராமசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் விடுதலைப் பேராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.நல்லகண்ணுக்கு டாக்டர் அம்பேத்கர் விருதை ஈவிகேஎஸ் இளங்கோவன் வழங்கினார்.

Read previous post:
vijayakanth - gb
அதிமுக, திமுக மீது விஜயகாந்த் தாக்கு!

“அதிமுகவை போலவே திமுகவையும் எனக்கு பிடிக்காது. காரணம் இவை இரண்டும் மக்கள் விரோத கட்சிகள்” என்று விஜயகாந்த் கூறினார். தேமுதிக 11-வது மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு

Close