“எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்”: புதுக்கட்சி தொடங்கினார் தீபா கணவர்!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் கணவர் மாதவன் ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார்.

தனது மனைவி தீபா  தொடங்கிய எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையிலிருந்து விலகிய மாதவன், புதுக்கட்சி தொடங்குவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் மாதவன் இன்று ஜெயலலிதா எம்.ஜிஆர்.சமாதிகளுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் ஜெயலலிதா சமாதியில் வைத்து தனது புதுக்கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்தார். தனது கட்சிக்கு ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம்’ என பெயர் வைத்துள்ளார்.

இது குறித்து மாதவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று புதிய கட்சி தொடங்கியுள்ளேன். தீபா பேரவைக்கும், எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒரு கணவராக இருந்து தீபாவுக்கு தேவையானதை செய்தேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக நான் இருப்பேன்.கட்சி  மாநாட்டில் தலைவர் அறிவிக்கப்படுவார்” என்றார்.