“நான் பூ அல்ல; விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள்”: மு.க.ஸ்டாலினுக்கு கமல் பதில்!

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா” என குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், “அவர் என்னைப் பற்றி அப்படி கூறியிருக்க மாட்டார் என நினைக்கிறேன். இருந்தாலும் சொல்கிறேன். நான் பூ அல்ல; விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள். விதைத்துப் பாருங்கள். வளருவேன்” என்றார். இன்னொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “நான் திமுக்வுடன் கூட்டணி அமைப்பேன் என்று எப்போதும் சொன்னதில்லை” என்றார் கமல்.

 

Read previous post:
0a1c
“அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது!” – மு.க.ஸ்டாலின்

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு: கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது

Close