“தனுஷ் எங்கள் மகன்” என மேலூர் தம்பதியர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி!

பிரபல இயக்குனர் கஸ்தூரி ராஜா – விஜயலட்சுமி தம்பதியரின் இளைய மகன் பிரபல நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குனருமான தனுஷ். 1990களின் துவக்கத்திலிருந்து தமிழ் திரையுலகில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும்.

ஆனால், மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரியும், அவர் தங்களுக்கு மாதாமாதம் ரூ.68 ஆயிரம் ஜீவனாம்சம் தர உத்தரவிட வேண்டும் என்றும் மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி தனுஷ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதில் தனுஷூக்கு சாதமாக தற்போது தீர்ப்பு கிடைத்துள்ளது. மேலூர் தம்பதியரின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு அளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக மேலூர் தம்பதியர் கூறியுள்ளார்கள்.