இப்படியும் ஒரு விமர்சனம்: “இறைவி அல்ல; மூதேவி!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இறைவி’ படத்துக்கு ஆதரவாக எக்கச்சக்கமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. என்றாலும், அதே அளவுக்கு அந்த படத்தை கடுமையாக தாக்கும் விமர்சனங்களும் வந்தவண்ணம் உள்ளன. அத்தகைய எதிர்ப்பு விமர்சனங்களில் ‘ஏனாதி பூங்கதிர்வேல்’ என்ற முகநூல் பதிவரின் விமர்சனமும் ஒன்று. அது இங்கே…

                                                         # # #

நேற்று இரவு இந்த படத்தைப் பார்த்தேன். கிட்டத்தட்ட பெண்ணுரிமை எனும் பெயரில் ஒரு ஆணும் பெண்ணும் படுப்பதையும், பின் பிரிவதையும், அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு ஒரு கூட்டத்தை உருவாக்குவதையும், பலரை அதுபோல வாழத் தூண்டுவதற்குமாக படத்தை எடுத்துள்ளான்.

விஜய் சேதுபதி அறிமுகம் எப்படி தெரியுமா? கட்டில் ஆடும். கேமராமேன் அப்டியே கீழே விளக்கு பிடிக்குறான்… அங்கே இன்னொருத்தன் பொண்டாட்டிகூட படுத்துக்கொண்டிருக்கிறான் விஜய் சேதுபதி. வேகமா ஜட்டியோட எழுந்து பேன்ட்ட மாட்டிக்கிட்டே, “என்னை கல்யாணம் பண்ணிக்கோ”னு சொல்றான். அவள்: “ போடா, இதே வேலையா போச்சு… கல்யாணம் கல்யாணம்னு…”

எஸ்.ஜே.சூர்யா அறிமுகம்… நல்லா குடிச்சுப்புட்டு கூத்தடிக்கிறது. படத்தில் இயக்குனர் வேடம். எடுத்த படம் வெளியாகலன்னு தினம் குடிக்கிறான். பொண்டாட்டி விவகாரத்து கேட்க, திருந்துறான். கடைசியில் விஜய் சேதுபதியை கொல்றான். கேட்டால், “கோபத்தில் கொன்னுட்டேன்” என்கிறான். “ஆம்பள… நெடில், பொம்பள குறில்…” என்று, ஆம்பளைனா திமிர்னு வசனம் பேசுறான். சினிமாக்காரன் வாழ்க்கையை மொத்த ஆண் சமூகமாக சித்தரித்த துருப் பிடிச்ச பாத்திரத்தில் நடித்து முடிச்சாச்சு.

பாபியா, பேபியா… அவன் ஒருத்தன், இப்போதான் ‘கோ 2’ ல் பார்த்துவிட்டு மகிழ்ந்தேன். ஆனால் அவன் செய்த கூத்து… வாய்ப்பே இல்லை… விஜய் சேதுபதி பொண்டாட்டிய கல்யாணத்துக்கு முன்னாடி பார்த்ததும் பாபிக்கு காதல் வருதாம். அப்புறம் விஜய் சேதுபதி, “இறைவி”யாக வரும் அஞ்சலியை கல்யாணம் முடிச்சு, சரியா குடும்பம் நடத்த மாட்டானாம். உடனே அஞ்சலிகிட்ட, “விஜய் சேதுபதி உன்ன நல்லா பார்த்துக்க மாட்டான். நான் நல்லா பார்த்துகிறேன்”ன்னு பாபி சொல்றான். அதுக்கு நம்ம இறைவியும், “என்னை நீங்க மட்டும்தான் காதலிச்சிருக்கிங்க”ன்னு அப்டியே சோகமா ஒரு வசனம் பேசிவிட்டு “நாளைக்கு பார்ப்போம்” என்று கூறி செல்கிறாள்…

இந்த கருமம் எல்லாம் எப்போ நடக்குது தெரியுமா? எஸ்.ஜே.சூர்யா இயக்கிய படத்தை வெளியிடாமல் இழுத்தடித்த தயாரிப்பாளரை கொலை செய்துவிட்டு விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறான். அந்த இடைவெளியில் தான் பாபி இந்த வேலையை காட்டுறான்.

பாபி எஸ்.ஜே.சூர்யாவோட தம்பி. விஜய் சேதுபதி தம்பி மாதிரி. தம்பி மாதிரி இருக்கறவன் அண்ணனுக்காக கொலை செய்றான். கூடப்பிறந்தவன், அண்ணன் மாதிரி இருக்கிற விஜய் சேதுபதியின் வாழ்க்கைய நாசமாக்குறான்.

அப்புறம், சிறையிலிருந்து வெளியே வந்து குடும்பம் நடத்த முயற்சி பண்றான் விஜய் சேதுபதி. அஞ்சலிகிட்ட பாபி பேசினது தெரிய வருது. இடையில் சூர்யாவின் பணத் தேவைக்காக சிலை கடத்தல். அதை சாதகமா வச்சு, மீண்டும் விஜய் சேதுபதியை சிறைக்கு அனுப்பிவிட்டு, அஞ்சலியை அடைய முயற்சி பண்றான் பாபி. சிலை கடத்தும்போது விஜய் சேதுபதியை காவல்துறையில் சிக்க வைக்கிறான். குடும்பத்தில் எல்லோரிடமும், “விஜய் சேதுபதி சிக்கிக்கொண்டான்” என்றும், “சீக்கிரம் வெளியே எடுத்திடலாம்” என்றும் கூறி நடிக்கிறான். ஆனால் விஜய் சேதுபதி காவல்துறையுடன் போகும்போது, வழியிலேயே தப்பிச்சு ஓடி வந்து, அஞ்சலியை எங்கேயாவது அழைத்துப் போய் வாழ முயற்சி பண்றான்.

அப்போ அஞ்சலிகிட்ட கேட்கிறான் விஜய் சேதுபதி. “பாபி உன்ன காதலிக்கிறதா சொன்னானா?” “ஆமா, சொன்னான்.” “அதுக்கு நீ என்ன சொன்ன?” “நானும் காதலிச்சேன்… ஆனால் அவனை விட்டு ஊருக்கு வந்துட்டேன். என் தலை எழுத்து உன்கூடத்தான் வாழணும்னு இருக்கு” என்கிறாள் அஞ்சலி.

மெதுவா விஜய் சேதுபதி கேட்கிறான். ..

சேது: நீ அவன்கூட ?….

அஞ்சலி: என்ன படுத்தியான்னு கேட்குறியா? அதை சொல்லித் தான் வாழணும்னா நீ இடத்தை காலி செய்திடு.

சேது: இல்லை. உன்னோடு இருக்கிறேன் – என்று கட்டிபிடிச்சு முத்தம் கொடுத்துக்கிறான். இதெல்லாம் அப்டியே சோகமா காட்டுறானுங்க.

இப்போ ஊரைவிட்டு எங்கேயாவது போய் வாழணும். பணம் இல்லை. எஸ்.ஜே.சூர்யாகிட்ட கேட்கறான். “என்னடா, ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டயா? இன்னும் ரெண்டு நாள்ல பாபி உன்ன பெயில்ல எடுப்பேன்னு சொன்னானேடா” என்று அப்பாவி எஸ்.ஜே.சூர்யா சொல்ல, பணம் வாங்க வீட்டுக்கு போறான் விஜய் சேதுபதி. அங்கே பாபியும் வந்திடுறான். ரெண்டு பேரும் சந்திக்குறாங்க…

பாபி: எங்கே போற?

சேது: ஊரை விட்டு…!

பாபி: தனியாவா?

சேது: பொண்டாட்டியோட…

பாபி: இனிமேலாவது அஞ்சலிய நல்லா பார்த்துக்கோ. இல்ல, கொன்னுடுவேன் .

கீழே கிடக்கும் ஒரு அழகான பொம்பள கம்பி சிலையை எடுத்து பொடதியிலேயே போடுறான் விஜய் சேதுபதி. செத்துப் போறான் பாபி. தன் சொந்த தம்பியை கொலை செய்துட்டானே என்ற கோபத்தில்தான் எஸ்.ஜே.சூர்யாவும் விஜய் சேதுபதியை கொல்றான்.

பாபி, விஜய் சேதுபதி – இரண்டு பேரும் செத்துட்டான். எஸ்.ஜே.சூர்யா ஜெயிலுக்கு போயிடுவான். அவன் பொண்டாட்டிக்கு இன்னொருத்தனோட கல்யாணம் முடிச்சிடும். அஞ்சலி சுதந்திரமா மழையில் நனைவா… இறைவின்னு சொல்லி படம் முடியுது…

ஆக மொத்தத்தில் ஆணும் சரியில்லை, பெண்ணும் கொஞ்சம் சரியில்லை… எல்லோரும் அவுத்துவிட்ட எருமை போல வாழுங்கள் என்று கூறுகிறது படம்.

அடுத்து ஏதாவது ஒரு மூதேவி படம் எடுப்பான்.

சமூகத்தை குழப்பிக் கெடுப்பதில் தீவிரமா திரைத்துறையில் அலையிறானுங்க… நாமளும் இவனுங்களுக்கு பாடம் புகட்ட அலையிறோம். காலம் முடிவு செய்யட்டும்.

ஏனாதி பூங்கதிர்வேல்