‘இறைவி’ விமர்சனங்கள் மீது ஒரு விமர்சனம்!

இறைவி படத்தை இன்னும் பார்க்கல.

ஆனால் சில ஆண்கள் எழுதுவதை பார்த்தால் பயமா இருக்கு. ஏதோ ஆண்கள் அட்டூழியக்காரர்கள் போலவும், பெண்கள் அவர்களை கஷ்டப்பட்டு கல்யாணம் கட்டி சமாளிப்பது போலவும் எழுதுகிறார்கள். எனக்கு இந்த தியரியில கொஞ்சம்கூட நம்பிக்கையே இல்ல.

காலாகாலமாக ஆண்கள் மீது இருக்கும் பழி அவர்கள் ஆதிக்கவாதிகள் என்பது தான். ஆனால் கடந்த 15-20 வருடங்களில் ஆதிக்கவாத பெண்கள் தான் அதிகமாகியுள்ளதை நான் என் அனுபவத்தில் பார்க்கிறேன். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது.

இந்த victimization என்பதே ஒரு விதமான அபத்தம். எனக்குத் தெரிந்து, காரணமே சொல்லாமல் முறுக்கிக்கொள்வது, ‘உன்னுடைய இந்த நண்பனை எனக்கு பிடிக்காது, அவன் கிட்ட ஏன் பேசற?’ என்பது போன்ற “Running under the nerve” வகையிலான டார்ச்சர்களை பெண்கள் தான் பெரும்பாலும் செய்கிறார்கள். இல்லைன்னு சொல்லுங்களேன் பார்ப்போம்?

ஊதாரி ஊர்மேயும் கணவன் இருக்கும் குடும்பத்து பெண்களை பார்க்க எவ்வளவு பரிதாபமாக இருக்குமோ, அந்த மாதிரி குதர்க்கம்-குடைச்சல் பெண்கள் இருக்கும் குடும்பத்து ஆண்களை பார்க்கவும் பரிதாபமாகத் தான் இருக்கும். இதுல என்ன பெரிய வித்தியாசம்னு தெரியல.

ஏதோ இறைவன் என்றால் அயோக்கிய சிகாமணிகள், இறைவியே என்றும் ரட்சிக்கிறாள் என்ற பில்டப் எல்லாம் ரொம்ப ஓவர். இந்த பில்டப் எல்லாம் என் அம்மா தலைமுறையோட முடிந்தது. சும்மா லைக்-ஷேர் விழணும்கறதுக்காக ஆண்களை ஆண்களே தூற்றுவது என்பது மல்லாக்கப் படுத்து துப்பிக் கொள்வதற்கு சமம்.

உங்களை மாதிரி தண்டங்களால் தான் சர்வதேச ஆண்கள் தினத்தை செருப்புக்கு கூட மதிக்க மாட்டேங்கறாங்க.

பெண்மையை போற்றுங்கள். ஓகே. ஆண்மையை தூற்றித்தான் பெண்மையை போற்றுவேன் என்பதெல்லாம் சுத்த பச்சோந்தித்தனம்.

ஆமாம். எங்க அம்மா வாழ்க்கையில கஷ்டப்பட்டாங்க. பக்கத்துலயே இருந்து கண்ணால பார்த்தேன். அப்பா கஷ்டப்பட்டிருப்பாரு. அவர் வேலையில என்ன சிக்கல் அனுபவிச்சிருப்பாருன்னு நான் பார்க்கல. நானா வேலைக்கு போகும்போது தான் பார்க்கறேன்.

இதுல என்ன இறைவி தான் கிரேட் என்கிற பில்டப்?

இப்படி ஒரு பக்க நியாயத்தை மட்டுமே எழுதுறதுக்கு நீங்களெல்லாம் வெட்கப்படணும் எழுத்தாளர்ஸ்!

– கார்த்திக் ரங்கராஜன்