ஃபேஸ்புக், ட்விட்டர் யுக கல்லூரி காதல் கதை ‘இணைய தலைமுறை’

மாறன் கிரியேஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பெ.இளந்திருமாறன் தயாரிக்கும் படத்திற்கு ‘இணைய தலைமுறை’ என்று பெயரிட்டுள்ளார்கள்.

நாயகனாக அஸ்வின் குமார் நடிக்கிறார். இவர் ‘டூரிங் டாக்கீஸ்’, ‘மாதவனும் மலர்கொடியும்’ போன்ற படங்களில் நடித்தவர்.

நாயகியாக மனிஷாஜித் நடிக்கிறார். இவர் ‘கம்பீரம்’ படத்தில் சரத்குமாரின் மகளாக நடித்தவர். அத்துடன் ‘நண்பர்கள் கவனத்திற்கு’, ‘விந்தை’ போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

இவர்களுடன் ரவி, சத்யன், சிவகுமார், சர்மிளா, சஞ்சய், சரத், வனகைதி, தென்னவன், ராஜேந்திரநாத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சு.சி.ஈஸ்வர். இவர் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர்.

‘இணைய தலைமுறை’ படம் பற்றி இயக்குனர் சு.சி.ஈஸ்வர் கூறுகையில், “கல்லூரி வாழ்க்கை என்பது சுவாரஸ்மானது. அது மட்டுமல்ல, கல்லூரி மாணவ – மாணவிகள் உல்லாசப் பறவைகளாக பாடியாடி திரிந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை காதல், மோதல், சென்டிமென்ட், காமெடி கலந்து ‘இணைய தலைமுறை’யாக உருவாக்கியுள்ளோம். படப்பிடிப்பு   ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் படம் திரைக்கு வருகிறது” என்றார்.

ஒளிப்பதிவு – ஆரோ

இசை – டி.ஜே.கோபிநாத்

பாடல்கள் – இளையகம்பன், பெ.இளந்திருமாறன்

கலை – தியாகு

நடனம் – ரமேஷ் கமல்

ஸ்டண்ட் – ஆர்.கே.முரளி

எடிட்டிங் – வில்ஸி

தயாரிப்பு –  அம்பிகா முஜீப்

கதை, தயாரிப்பு, இணை இயக்கம் – பெ.இளந்திருமாறன்

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி