காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த திகில் படம் ‘விதி மதி உல்டா’!

சமீபத்தில் வெளியான ‘டார்லிங்-2’ படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாகவும் நடித்து கவனம் ஈர்த்தவர் ரமீஸ் ராஜா. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும் படம் ‘விதி மதி உல்டா’. இவருக்கு ஜோடியாக ஜனனி நடிக்கிறார். இவர்களுடன் வித்தியாசமான கதாபாத்திரங்களில் டேனியல் பாலாஜி, கருணாகரன் ஆகியோரும், முக்கிய கதாபாத்திரங்களில் சென்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்மந்தன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

ரமீஸ் ராஜாவே தனது ‘ரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்’ எனும்  நிறுவனத்தின் மூலம் தயாரித்து நடிக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளர் விஜய் பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இப்படம் குறித்து ரமீஸ் ராஜா கூறுகையில், ‘‘மனித வாழ்க்கையின் நிகழ்வுகள் அனைத்துமே விதிக்கு உட்பட்டது. விதியை வெல்லக் கூடிய சக்தி மதிக்கு மட்டுமே உண்டு. ஒருவேளை அதுவே உல்டாவாகி விட்டால் என்ன விபரீதம் ஏற்படும்? இந்த கேள்விக்கான பதிலை காதல், காமெடி, ஃபேண்டஸி கலந்த திகில் படமாக உருவாக்கி வருகிறோம்” என்றார்.

இப்படத்திற்கு  மார்ட்டின் ஜோ ஒளிப்பதிவு செய்கிறார். அஸ்வின் இசை அமைக்கிறார்.

சென்னை, பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு வரும் ‘விதி மதி உல்டா’, வேகமாக வளர்ந்து வருகிறது.

Read previous post:
nas1
சினிமா பின்னணியில் உருவாகுகிறது ‘நான் அவளை சந்தித்தபோது’

சினிமா பிளாட்பார்ம் என்ற பட நிறுவனம் சார்பாக வி.டி.ரித்தீஷ்குமார் தயாரிக்கும் படம் ‘நான் அவளை சந்தித்தபோது’ இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் பார்த்திபன்

Close