“ஆயிரம் இளைஞர்கள் இணைந்து விட்டால் ஆயுதம் எதுவும் தேவை இல்லை!”

இன்று மெரீனாவில் நடந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம், முழுக்க முழுக்க முகநூல், வாட்ஸாப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது.

இத்தனை நாள் உள்ளுக்குள் எரிந்துகொண்டிருந்த நெருப்பு இன்று கோபமாக, போராட்டமாக எரிய ஆரம்பித்திருக்கிறது.

இதன் வெப்பத்தை நாடு முழுதும் பரவச் செய்யும் வேலையை தொடருவோம் தோழர்களே…

இதில் தண்ணீரை ஊற்றி அணைக்கும் வேலையை இங்கிருக்கும் ஆளும் வர்க்கமும், அதிகார வர்க்கமும் அதற்கு துணை போகும் ஊடகங்களும் செய்வார்கள்.

அதற்கு பலியாகிவிடாமல் வென்று காட்டுவோம்.

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை 
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல் 
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!”

 பாரதி பழனிச்சாமி

 # # #

ஆயிரம் இளைஞர்கள் இணைந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை..!

மெரீனாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் ஒன்றுகூடல்…

#TNneeds JALIKKATU

வேல்முருகன்