இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்ள ‘காவிமய எதிர்ப்பு கூட்டியக்கம்’ துவக்கம்!

சமீபகாலமாக மேலோங்கியிருக்கும் இந்துத்துவ அச்சுறுத்தலை எதிர்கொள்வது பற்றியான கலந்தாலோசனைக் கூட்டம், சென்னை நிருபர்கள் சங்கத்தில், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவனால் ஒருங்கிணைக்கப்பட்டது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

* தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன்

* திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி

* மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாகிருல்லா

* எஸ்.டி.பி.ஐ தலைவர் தெகலான் பாகவி

* தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.சரிப்

* தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன்

* மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி

* ஆதித் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் நாகராஜ்

* தமிழக வாழ்வுரிமை கட்சியின் தொழிற்சங்கப் பிரிவின் தலைவர் பாபு

* தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன்

* தமிழர் விடியல் கட்சியின் சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மா.டைசன்

ஆகியோர் இதில் கலந்துகொண்டார்கள்.

இசுலாமியர் மற்றும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல், சாதிய வன்முறை, தமிழர்கள் மீதான இந்தி மற்றும் சமசுகிருதத் திணிப்பு, புதிய (பழைய காவி) கல்வி கொள்கை, உணவு முறையில் காவிகளின் தலையீடு, காவிமயமாக்கப்படும் அரசுத் துறை போன்ற இந்துத்துவ அடக்குமுறைகளைப் பற்றியான கருத்துகள் இக்கூட்டத்தில் பகிரப்பட்டது.

சமீபகாலமாக, குறிப்பாக மத்தியில் பா.ஜ.க தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின் தலைதூக்கியிருக்கும் இந்துத்துவ அடக்குமுறையை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளும் விவாதிக்கப்பட்டது. அனைவரும் தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

இறுதியாக “காவிமய எதிர்ப்புக் கூட்டியக்கம்” என்ற பெயரில் ஒரு கூட்டியக்கத்தை துவங்க முடிவு செய்யப்பட்டது. காவி பயங்கரவாத சக்திகளுக்கு எதிராக இக்கூட்டியக்கம் தொடர்ச்சியாக செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. எதிர்வரும் காலங்களில் கூட்டியக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டங்கள் மற்றும் மாவட்ட, மண்டல வாரியான பிரச்சாரங்கள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அனைத்து அமைப்புகளையும் தொடர்பு கொள்ளவும் ஒருங்கிணைக்கவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழுவினர்:

நாகை திருவள்ளுவன் (தமிழ்ப் புலிகள் கட்சி)
திருமுருகன் காந்தி (மே பதினேழு இயக்கம்)
மா.டைசன் (தமிழர் விடியல் கட்சி)
ஜெய்னுல் அபுதின் (மனிதநேய மக்கள் கட்சி)
அமீர் அம்சா (எஸ்.டி.பி.ஐ)
உமாபதி (திராவிடர் விடுதலை கழகம்)
மனோஜ்குமார் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்)
பிரபாகரன் (தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு).

காவிமய எதிர்ப்புக் கூட்டியக்கத்தின் அடுத்தக்கட்ட ஆலோசனைக் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறும் என்றும், இதில் விடுபட்டுள்ள மற்ற தோழமை கட்சிகள் மற்றும் இயக்கங்கள் விரைவில் இணையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.