“போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு?”

ஒரு நாடு.

அரசுகள் மக்களை ஒடுக்குகின்றன. நீதிமன்றங்கள் மக்கள் விரோத தீர்ப்புகள் எழுதுகின்றன. நீதிபதிகள் ஊர் பஞ்சாயத்து தலைவருக்கு நிகரான அறிவுடன் வசனம் பேசுகின்றனர். மக்கள் இளைஞர்களை மட்டும் நம்புகின்றனர்.

போராட்டம் தான் மக்களுக்கு வழி எனில் எதற்கு ஓட்டு? தேர்தலுக்கு என்ன அவசியம் இனி இங்கு?

எந்த காலத்திலும் Anarchy-யை தேர்ந்தெடுப்பது மக்கள் அல்ல. அரசுகளும் அமைப்பும் தான் அவர்கள் கைகளில் Anarchy-யை தூக்கிக் கொடுக்கின்றன.

அதிகாரம் அற்ற போராட்டத்தை அறமாய் செய்து காட்ட முடிபவர்களுக்கு, அரசு இல்லாமல் தங்களை தாங்களே நிர்வாகம் செய்து கொள்ளலாம் என தோன்றினால் என்ன ஆகும்?

அரசு என்னும் கற்பிதத்தின் வீழ்ச்சியை பார்த்து கொண்டிருக்கிறோம்!

RAJASANGEETHAN