‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி!

காஷ்மீரை பிரித்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, லடாக் மக்கள் இன்று மாநில அந்தஸ்து கேட்டு போராடிக் கொண்டிருக்கும் சூழலில், ‘அமரன்’ திரைப்படம் ஒரு தேவையில்லாத ஆணி.

காஷ்மீர் ஃபைல்ஸ் படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், ஹிஸ்புல் முஜாஹுதின் தீவிரவாதத்தை தூக்கிக் கொண்டு வருவது ஆபத்தான அரசியல். மேஜர் முகுந்தின் கதையை ஒரு திரைக்கதை போல, விக்கிப்பீடியாவிலேயே நன்றாக எழுதி இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு, பாரதியாரின் ‘அச்சமில்லை’ பாடலை பாடிக் கொண்டு ‘ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸில்’ பணியாற்றுவதாக காட்டி, ஆங்கிலப் படங்களின் கமாண்டர் உறுமல்களை வைத்து ஒட்டப்பட்டிருக்கும் டீசரே படம் எத்தகைய அபத்தமாக இருக்குமென்பதற்குமான டீசருமாக இருக்கிறது.

இந்திய தேசியத்தின் மீது கற்களை எறிந்த காஷ்மீர் மக்களை, தீவிரவாதிகள் மீது கல் எறிந்ததாக திரிபுக் கதை கட்டும் இயக்குநரின் இந்திய தேசியப் பாசத்தில் சிவகார்த்திகேயன் பலியாவதுதான் சோகம்.

-RAJASANGEETHAN