விதார்த் நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்தின் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக, இயக்குனராக, விநியோகஸ்தராக 40 ஆண்டுகளாக இருந்துவரும் கேயார், தற்போது தனது கே.ஆர்.இன்போடைன்மென்ட் நிறுவனம் சார்பில், ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்தை வெளியிடுகிறார். இந்த படத்தில் விதார்த், சரவணன், ஜானவிகா ஆகியோர் நடித்துள்ளனர். ரவி முருகையா இயக்கியுள்ளார். ஜி.ராமலிங்கம் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் குறித்து கேயார் கூறுகையில், ‘‘ஆயிரம் பொற்காசுகள்’ ஒரு முழு நீள காமெடி திரைப்படம். குடும்பத்துடன் பார்த்து ரசிக்க நல்லதொரு படம். கோடை கால கொண்டாட்டமாக இது திரைக்கு வர இருக்கிறது” என்றார்.

மேலே இருப்பது இப்படத்தின் போஸ்டர்.