காந்தி கொலையுண்ட நாளை ‘இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக’ அனுசரிப்போம்!

இந்திய விடுதலைக்காகவும், இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்காகவும் அறவழியில் போராடிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று (ஜனவரி 30).

காந்தியை சுட்டுக் கொன்ற பார்ப்பன – இந்துத்துவ வெறியனான நாதுராம் வினாயக் கோட்சே, ‘காந்தியை கொன்றவன் ஒரு இஸ்லாமியன்’ என பொய்யாய் காட்டி, இந்துக்களுக்கு வெறியூட்டி, இஸ்லாமியரை கொன்றொழிக்கும் பயங்கர சதித் திட்டத்துடன் தன் கையில் “இஸ்மாயில்” என பச்சை குத்தியிருந்தான் என்பது உலகம் காறித்துப்பிய உண்மை.

கோட்சேவின் இந்துத்துவ வாரிசுகள் இன்று இந்நாட்டின் ஆட்சியதிகாரத்தில் இருப்பதால், அவர்கள் கிஞ்சித்தும் வெட்கமின்றி, கோட்சேவை “தேச பக்தன்” என கொண்டாடுவதும், அவனுக்கு “சிலை” வைப்பதும், “வீரவணக்கம்” செலுத்துவதும், காந்தி படத்தை நீக்கிவிட்டு போலியாய் ராட்டை சுற்றுவதுமாக பேயாட்டம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.

0a

அது மட்டுமல்ல, இன்றைய இந்துத்துவவாதிகள் கோட்சேவை பின்பற்றி முற்போக்காளர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் உயிர் பறித்து, மனித ரத்தம் குடித்து, ரத்தக் காட்டேரிகளாய் அங்கிங்கெனாதபடி எங்கும் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில், காந்தி கொடூரமாக கொல்லப்பட்ட நாளை “காந்தி நினைவு தினம்” என மென்மையாகவும், “தியாகிகள் நினைவு தினம்” என பொதுப்படையாகவும் இனியும் அனுசரிக்காதீர்கள் என காலம் நம்மை வற்புறுத்துகிறது.

எனவே, இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ஆம் தேதியை “காந்தி கொலை செய்யப்பட்ட நாள்” என பகிரங்கமாக அறிவித்து நினைவில் ஏந்துவோம். இந்நாளை “இந்துத்துவ பயங்கரவாத எதிர்ப்பு நாளாக” திக்கெட்டும் அனுசரிப்போம். இந்து சமயத்தை அல்ல, இந்துத்துவ கொடுங்கோன்மையை – இந்துத்துவ பாசிசத்தை – இம்மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மன்ணோடும் துடைத்தழிக்க சபதம் ஏற்போம்.

பி.ஜே.ராஜய்யா,

ஆசிரியர், ஹீரோ நியூஸ் ஆன்லைன்.