தி.மு.க. கூட்டணிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?

(K@BlitzkriegKK – என்ற Twitter பதிவர், ட்விட்டரில் எழுதிய பதிவு).

நாளைக்கு நீங்க ரோட்ல போய்க்கிட்ருப்பீங்க. ஒரு நாலு பேர் வந்து ”ஜெய் ஸ்ரீராம் சொல்லு”ம்பானுக. நீங்க சிரிச்சுட்டே ”விளையாடாமப் போங்க பாஸ்”னு சொல்லி நகரப் பாப்பீங்க. அப்ப ஒருத்தன் பொடனிலயே போடுவான். ”நீ இந்து தான? ஜெய் ஸ்ரீராம் சொல்லமாட்டியா?”ன்னு. உங்களுக்கு என்ன நடக்குதுன்னே புரியாது.

சுத்தி இருக்கவங்களும் இத ஒரு பெருசாவே பாக்க மாட்டாங்க. ”ஒரு ஜெய் ஸ்ரீராம் சொல்றதால என்ன ஆகப்போகுது? சொல்லிட்டுப் போகலாம்ல”ன்னு உங்களுக்கு அட்வைஸ் கூட பண்ணுவாங்க. ”டேய் நான் ஏன்டா சொல்லணும்? இது சொன்னாத்தான் நான் இந்துவா?”ன்னு உங்களுக்குத் தோணும். ஆனா அடுத்த அடி விழும் முதுகுல.

இப்ப ”சொல்ல முடியாது”ன்னா அடுத்த கேள்வி ”நீ கிறிஸ்டியனா? முஸ்லீமா?”ன்னு வரும். ”இல்ல, இந்துதான்”னு சொன்னா, அப்ப சொல்லுடா”ன்னு அடுத்த அடி விழும். அதை ஒரு நாலு பேரு வீடியோ எடுப்பானுக. இந்நேரம் உங்களுக்கு ரத்தம் வந்துருக்கும். அவனுங்க உற்சாகமாகி அடிவெளுக்க ஆரம்பிப்பானுக. இப்ப என்ன நடக்கும்?

இப்ப உங்க சித்தாந்தம், கொள்கை எல்லாமே உங்க முன்னாடி வந்து கேலியா சிரிக்கும். யாரைப் பாத்தாலும் தனித்தனி மதமாக பிரிஞ்சு போயிக்கிட்டே இருப்பாங்க அவங்கவங்களைக் காப்பாத்திக்க. அப்ப நீங்க ஒரு முற்போக்கு ஆளைத் தேடுவீங்க. திகவோ கம்யூனிஸ்டோ திமுககாரனோ யாராவது மதம் இல்லங்கறவனைத் தேடுவீங்க.

ஆனா யாரும் சிக்கமாட்டான். ஏன்னா அவன் அவன் பொழப்பைக் காப்பாத்தப் போயிருப்பான். வர்ற தேர்தல்ல அதிமுக பாஜகவுக்கு ஓட்டுப்போட்டாலோ அல்லது வேற யாராவது மூணாவது அணி, நாலாவது அணி, நோட்டான்னு போட்டு ஓட்டைப் பிரிக்க வச்சாலோ இதுதான் நடக்கும். இல்லன்னு உங்களால உறுதியா சொல்ல முடியுமா?

இதனால, ”திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க”ன்னு சொல்ல முடியாது. ஏன்னா இது உங்க உரிமை. ஆனா ஒவ்வொருத்தரோட உரிமை உரிமைன்னு பொது அமைதியை, சமத்துவத்தை, மனிதாபிமானத்தை பாசிசக்காரர்களிடம் அடகு வைக்க முடியாது. ஏன்னா இது ஏதோ ஒரு மாநிலத் தேர்தல் இல்லை. ஒட்டுமொத்த பாசிசத்துக்கும் அடிக்க வேண்டிய சாவுமணி.

நீங்க ஆகப்பெரிய இந்து பக்தனாக இருக்கலாம். ராமாயணம், மகாபாரதம்னு கரைச்சுக் குடிச்சுருக்கலாம். ஆனா ஒரு மதவெறி பிடிச்ச கும்பல் கிட்ட நீங்க மாட்டுனீங்கன்னா உங்க அடிப்படை அறிவுக்குப் புறம்பா நீங்க நடக்குறதை உங்க மனசாட்சி கேள்வி கேட்டாலும் உங்களால எதிர்க்க முடியாது. துணையும் இருக்காது.

இது இந்து மதத்துக்கு மட்டுமில்ல. எந்த நாட்டுல எந்த மதத்துலயும் அடிப்படைவாதிகளிடம் நாடு சிக்கினால் இதுதான் நடக்கும். இது எல்லா ஊர்கள்லயும் நடக்குது. ஒவ்வொரு இடங்கள்ல ஒவ்வொரு மதத்தோட பேர்ல. கிறிஸ்துவம், இஸ்லாம், ஏன் அகிம்சையை வலியுறுத்துற புத்தமதம் நிலவுற இலங்கைல கூட நடக்குது.

முற்போக்கானவர்களைத் தேர்ந்தேடுப்பதும் அவர்களைத் தக்கவைத்துக்கொள்வதும் நமது அடிப்படைக் கடமை. நீங்க என்னென்ன காரணங்களுக்காக பிற்போக்குவாதிகளை ஆதரித்தாலும் உங்க அடிப்படை உரிமைகள் பறிபோவது நிச்சயம். சிக்கல் என்னன்னா அந்தப் பாசிசத்தையும் பிற்போக்கையும் ஒரு பெருங்கும்பல் ஆதரிக்கும்.

பின்குறிப்பு: இது உங்களைப் பயமுறுத்துவதற்காகவோ இல்லை மிகைப்படுத்தியோ கூறப்பட்டதல்ல. இயல்பாக நம் நாட்டிலோ பிற நாடுகளிலோ ஆங்காங்கே அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் திட்டமிட்ட சமூக வன்முறையே இவையெல்லாம். இதெல்லாம் நடக்காமல் பார்த்துக்கொள்வது நம் ஒவ்வொருவரின் கடமை. ஒன்றுபடுவோம். வாழ்த்துக்கள்.

(Shared from BARATHI THAMBI facebook page)