அஜீத்தின் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் இல்லை: 2-வது லுக் வெளியீடு!

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா, ரோபோ சங்கர், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்துவரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிவுற்றிருப்பதால், அந்தப் படம் பொங்கலுக்கு வெளியாகலாம் என்றும், அதனால் ‘விஸ்வாசம்’ ரிலீஸ் தள்ளிப்போகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் 2-வது லுக்கை வெளியிட்டு, பொங்கல் வெளியீட்டில் மாற்றமில்லை என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது படக்குழு.

0a1h